போலிகளை கண்டு ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு





























பந்தலூர்:"மாணவ சமுதாயம் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டது.

கூடலூர் நுகர்வோர் -மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், மாநில அரசு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு, உந்துனர்அறக்கட்டளை, தமிழ்நாடு-பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, குந்தலாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழாவை நடத்தின. 


இதில், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நுகர்வோரை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு சட்டங்கள் இருந்தும் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்வதில்லை. நுகர்வோருக்கு தகவல் தேர்வு செய்தல், குறைகளை சுட்டிகாட்டுதல், நிவாரணம் பெறுதல் உள்ளிட்ட 8 வகை சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மாணவ சமுதாயம் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார். 

தலைமையாசிரியர் கருப்பையா பேசுகையில், ""தவறுகளை தனி மனிதனால் தட்டிக்கேட்க இயலாது என்பதால் தான் நுகர்வோர்களை ஒன்றினைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை முறையாக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் பயன் கிடைக்கும்,'' என்றார். 

பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜான் மனோகர் பேசுகையில்,""நாம் பெறும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யாத நிலையில்; காலாவதியான நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். தேவைக்கேற்ற வகையில் எரிபொருள், சமையல் எரிவாயுக்களை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பு, நச்சுப்புகை ஆகியவற்றால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பொருட்களை வாங்கும்போது எடை, தயாரிப்பு-காலாவதி தேதி, விலை போன்றவற்றை சரிபார்த்து வாங்கிடவும், நுகர்வோர் குறித்த விழிப்புணர்வை பெறுவதிலும் மாணவ சமுதாயம் முன்வரவேண்டும்,''என்றார். 

பள்ளியின் 70 மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். தலைவராக சசிக்குமார், துணை தலைவராக சபிதா, செயலாளராக சசிகலா, துணை செயலாளராக சசிகலா, பொருளாளராக விஷ்ணு வினோதினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

ஆசிரியர் ஈஸ்வரன், பங்கஜ்குமார், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 



ஆசிரியர் காளு நன்றி கூறினார்.



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...