பொது மருத்துவ முகாம் சேரம்பாடி


பொது மருத்துவ முகாம் 

பந்தலூரை அடுத்த சேரம்பாடி சமுதாய கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், கோத்தகிரி ஐலண்ட் அறக்கட்டளை, மேங்கோ ரேஞ்ச் மருத்துவமனை, சாலோம் சாரிடபுள் டிரஸ்ட், பந்தலூர், கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்தினர்.
மேங்கோ ரேஞ்ச் மருத்துவமனை மருத்துவர் ரமாபிரபா தலைமையிலான மருத்துவ குழு பங்கேற்று சிகிச்சை அளித்தது. நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
ஐலண்ட் அறக்கட்டளை அறங்காவலர் அல்போன்ஸ்ராஜ், சாலோம் அறக்கட்டளை அறங்காவலர் விஜயன் சாமுவேல், பந்தலூர், கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் விஜய சிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேரங்கோடு ஊராட்சி உறுப்பினர் அஷ்ரப், முகாமினை துவக்கி வைத்தார். உதகை சமுதாய நல ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மகாவிஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்னர். 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...