பந்தலூர்:"சுகாதாரமான முறையில் வாழ்க்கை தரத்தை அமைத்து கொண்டால் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்,' என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி நிர்வாகம் இணைந்து செயல்படுத்தும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் நோய்கள் தடுப்பு முறைகள் எனும் தலைப்பிலான மாதாந்திர கூட்டத்தை நடத்தினர்.
உதவி தலைமையாசிரியர் சித்தானந்த் தலைமை வகித்து பேசினார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தண்டபாணி முன்னிலை வகித்தார்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,
"வீடுகளில் தேங்கும் நீர்நிலைகளால் தொற்றுநோய்கள் பரவுகிறது. வீட்டிற்கு வெளியிலும், வீட்டில் மேல்நிலை தொட்டிகளை மூடிவைப்பதுடன், தண்ணீர் டேங்குகளை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும்,'' என்றார்.
மேங்கோரேஞ்ச் மருத்துவமனை டாக்டர் ரெமாபிரதாப் பங்கேற்று பேசுகையில்,""புகையிலை பொருட்கள் பயன்பாடு, கொழுப்பு சத்து அதிகமுள்ள இறைச்சிகளை அதிகளவில் உட்கொள்வதால் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. எளிமையான உடற்பயிற்சி, உரிய நேரத்தில் கொழுப்பு சத்து இல்லாத உணவுகளை உட்கொள்தல் போன்றவற்றால் நோய் ஏற்படுவதை தடுக்கலாம். டெங்கு காய்ச்சல் இருப்பின் சிகிச்சை பெற முன்வரவேண்டும்,'' என்றார்.
தலைமை செவிலியர் எலிசபெத், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் விஜயன்சாமுவேல், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதுகலை ஆசிரியர் ராதா வரவேற்றார்.
மாணவி முத்துமாரி நன்றி கூறினார்

No comments:
Post a Comment