தமிழக சட்டமன்ற பேரவையில் 07.01.2011 நாளன்று அறிவிக்கப்பட்ட

 பார்வை 

1.அரசாணை (நிலை) எண் .26, வருவாய்த்துறை நாள் 18.01.2011

2.சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணை எண்.24818/2015, நாள் 12.08.2015

3.அரசாணை (நிலை) எண் .357, வருவாய்த்துறை நாள் 08.10.2015

4.அரசாணை (நிலை) எண் .40, வருவாய்த்துறை நாள் 24.05.2017

5.அரசாணை (நிலை) எண் .43, வருவாய்த்துறை நாள் 01.08.2018

6.நில நிர்வாக ஆணையர் அவர்களின் கடிதம் எண் F3/20764/2015 நாள் 10.01.2022

7.அரசாணை (நிலை) எண் .12, ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை நாள் 04.03.2022

8.ஆணை எண் 1010,1010A வருவாய் நாள் 30.09.1892

9.பதிவுத்துறை தலைவர் கடித்த எண்.23269/சி1/2023 நாள் :08.11.2023


தமிழக சட்டமன்ற பேரவையில் 07.01.2011 நாளன்று அறிவிக்கப்பட்ட ஆளுநர் உரையில் தமிழகத்தில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், பஞ்சமர் அல்லாதவர்கள் வைத்திருப்பதை மீளப்பெற்று மீண்டும் அவர்களிடமே திரும்ப ஒப்படைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவதற்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்து, மேதகு ஆளுநர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புக்கிணங்க பார்வை 1 ல் படிக்கப்பட்ட அரசாணையின்படி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.மு.மருதமுத்து அவர்கள் தலைமையில் குழுவினை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த குழுவின் அறிக்கை தற்போதுவரை வெளியிடப்படவில்லை.


பார்வை 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணையின் அடிப்படையில்,பார்வை 3 ல் படிக்கப்பட்ட அரசாணையின்படி பஞ்சமி நில மீட்புக்காக மாநில அளவிலான குழு ஒன்றை அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் 16.07.2015 உள்ளிட்ட மனுவின் மீது அதிகபட்சமாக இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற ஆறு வார காலங்களுக்குள் தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என முதல் மற்றும் மூன்றாம் பிரதிவாதிகளான முறையே தலைமை செயலர்/விழிப்புப்பணி ஆணையர் மற்றும் ஆதி திராவிட நலத்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த குழுவின் அறிக்கையும் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.


பார்வை 4 மற்றும் 5 ல் படிக்கப்பட்ட அரசாணைகளின்படி மீண்டும் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.இந்த மாநில அளவிலான குழு மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.ஆனால் இந்த குழுக்களின் ஆய்வு அறிக்கையும் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.


பார்வை 6 ன் படி நில நிர்வாக ஆணையர் அவர்கள் கடிதத்தில் ,மாநில அளவிலான குழுவின் 12 அமர்வுகள் நடத்தப்பட்டு, தற்போதுள்ள நில நிர்வாக ஆணையர் அவர்களை தலைவராக கொண்ட மாநில அளவிலான கமிட்டிக்கு பதிலாக ஆதிதிராவிடர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்களை தலைவராக கொண்டு மீண்டும் ஒரு குழு அமைப்பதற்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் வருவாய்த் துறை (நிலப் பிரிவு) குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், இந்த பிரச்சினையில் அனைத்து ஆதரவையும் காப்புப்பிரதியையும் வழங்குவதாகவும் உறுதியளித்ததுடன், ஆதிதிராவிடர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்களை தலைவராக கொண்டு மாநில அளவிலான குழுவை மீண்டும் அமைப்பதற்கான நில நிர்வாக ஆணையரின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக இதுவரை அமைக்கப்பட்ட எந்த குழுவின் அறிக்கையையும் தற்போதுவரை வெளியிடவில்லை.


பார்வை 7 ல் குறிப்பிட்ட அரசாணையின்படி அரசு முதன்மை செயலர்,ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை அவர்களை தலைமையாக கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வு அறிக்கையும் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.

எந்த அரசு வந்தாலும் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய குழு மட்டுமே அமைக்கிறது. அந்த குழுக்களின் ஆய்வு அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது பட்டியல் பிரிவு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். மேற்கூறிய பார்வைகளில் படிக்கப்பட்ட அரசாணைகளின் படி அமைக்கப்பட்ட குழுக்களின் ஆய்வு அறிக்கை நகல்களையும், பார்வை 3 ல் படிக்கப்பட்ட அரசாணையின் படி மாவட்ட ஆட்சியர்கள் அளவில் பஞ்சமி நிலங்களை மீட்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கை குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...