*75 வழக்கு என்றால் என்ன?*
காவல் நிலையத்தில் சில நேரங்களில் அடி தடி பிரச்சனைகளில் சண்டை போட்ட இருவர் மீதோ அல்லது ஒருவர் மீதோ SECTION 75 Tn police act வழக்கு போடப்படும்.
இதை தான் பெட்டி கேஸ் என்று சிலர் சொல்வார்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்கள் மீது காவல்துறை இந்த வழக்கை போடுகிறார்கள். இது தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையால் எடுக்கப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குற்றம் செய்பவர்களை தடுக்க இந்தமாதிரி செய்கிறார்கள்.
பொது அமைதியைப் பேணுவதற்குப் பொறுப்பான ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான கடமையைச் செய்யும்போது ஒருவரைக் கேள்வி கேட்டால், அதற்கு நாகரீகமாகப் பதிலளிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
இதை இன்னும் எளிமையாக உங்களுக்கு புரிகின்ற மாதிரி சொன்னால், பொது அமைதியை மீறும் ஒரு நபருக்கு சட்டம் தண்டனை அளிக்கிறது.
பொது இடமாக குறிப்பிடுவது மக்கள் கூட்டம் இருக்கும் இடங்கள் மேலும் ஒரு படகு அல்லது வேறு ஏதேனும் ஒரு கப்பலில் அல்லது விமானமும் பொது இடமாக கருதப்படும் என்று சட்டம் கூறுகிறது.
*75 வழக்கு தண்டனை.*
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவருக்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறை அல்லது ரூ.1000. தண்டனையாக விதிக்கலாம்.
No comments:
Post a Comment