பந்தலூர் : பந்தலூர் சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கே பி டி எல் பவுண்டேஷன், ஆல் தி சில்ட்ரன் ஒயிட் ஆரோ டிரஸ்ட் ஆகியன சார்பில், சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் காசநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்
சேரங்கோடு தேயிலை தோட்ட கழக கள அலுவலர் ராஜேஸ்வரி, காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகர்,
நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் ராஜா, ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், உதவும் கரங்கள் அமைப்பு சாரதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரபோஸ் பேசும்போது ஏழை மக்கள் பயன் பெரும் விதமாக அரசு மூலம் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுகின்றது பெரும்பான்மையான மக்களுக்கு அதிகமாக பாதிக்கும் கண்புரை நோய்க்கு கண்புரை அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். அரசு மூலம் செய்து தரப்படும் இது போன்ற முகாம்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்றார்.
கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி முகாமை
துவக்கி வைக்க நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மருத்துவகுழுவினர் ராம்குமார் தலைமையில் பார்வை குறைபாடு குறித்து பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்
முகாமில் சேரங்கோடு கிராம பகுதிகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேரில், 15 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு
மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பந்தலூர் அரசு மருத்துவமனை
காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் காசநோய் கண்டறிய எக்ஸ்ரே எடுத்தும், சளி மாதிரிகள் பெற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் முத்துசாமி, முன்னாள் கவுன்சிலர் கணபதி கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment