பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை எப்படி பெறுவது?*

 *பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை எப்படி பெறுவது?

 சம்மனை பிரதிவாதி பெறவில்லை என்றால் அவருக்கு சம்மனை எப்படி வழங்குவது என்று நீதிமன்றம் சில வரையறைகளை வகுத்துக் கூறியுள்ளது அதில் ஒன்றுதான் இந்த பேப்பர் பப்ளிகேஷன் என்ற நடைமுறையை முழுமையாக தெரிந்து கொண்டால் தான் சம்மன் ஒருமுறை அனுப்பினால் பேப்பர் பப்ளிகேஷனுக்கு உத்தரவு பெற முடியுமா என்கிற கேள்விக்கு முழுமையான விடையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

 *பேப்பர் பப்ளிகேஷன் என்றால் என்ன?

பேப்பர் பப்ளிகேஷன் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் விபரத்தினை பிரதிவாதிக்கு தெரியப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது அவருக்கு பேப்பர் பப்ளிகேஷன் அதாவது செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பதன் மூலமாக வழக்கு இருக்கும் விபரத்தினை பிரதிவாதிக்கு தெரியப்படுத்தும் நடைமுறையை தான் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டர் என்று சொல்கிறோம்.

 

 *நீதிமன்றத்தில் சம்மன் எப்படி அனுப்பப்படுகிறது?* 


நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு தாக்கல் செய்யும்பொழுது பிரதிவாதிக்கு சம்மன் (Summons) ப்ராசஸ் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் வழக்கு தாக்கல் செய்யும்பொழுதே அந்த வழக்கில் யார் பிரதிவாதியோ அவர்கள் எத்தனை நபர்களோ அவர்களுக்கு அந்த வழக்கின் மனுவின் நகல்கள் மற்றும் அந்த வழக்கில் ஆஜராகும் படி சமன்கள் எழுதப்பட்டு அதனோடு சேர்த்து அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட வேண்டும் அதை நீதிமன்றத்தின் மூலமாக பதிவு தபாலில் அனுப்புவார்கள்.


நீதிமன்றம் சம்மன் (Summons) அனுப்பிய உடனே அதை பிரதிவாதி வாங்கவில்லை என்றால் பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை பெற முடியுமா?

நீதிமன்ற வழக்கில் ஒரு சம்மன் (Summons) அனுப்பி அது பிரதிவாதிக்கு கிடைக்கவில்லை என்றால் உடனடியாக பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டர் பெற முடியாது. ஏனென்றால் நீதிமன்றம் மூலமாக அனுப்பிய சம்மன் என்ன காரணத்தினால் பிரதிவாதிக்கு கிடைக்கவில்லை என்பதை பார்க்க வேண்டும்.


நீதிமன்றம் மூலமாக வழக்கில் அனுப்பபட்ட சம்மன் (Summons) பிரதிவாதியின் முகவரி மாறியதால் கிடைக்கவில்லையா? அல்லது தவறான முகவரியா? அல்லது அதே வீட்டில் இருந்து கொண்டு பிரதிவாதி இல்லாததுப் போல் ஏமாற்றி வாங்காமல் இருக்கிறாரா? அல்லது அவர் அதே முகவரியில் இருந்து கொண்டு சம்மனை வாங்க மறுத்துவிட்டாரா? என்று மேற்படி எந்த காரணத்திற்காக பிரதிவாதி நீதிமன்றம் சம்மனை பெறவில்லை என்பதை கவனமாக கவனிக்க வேண்டும் 


1. பிரதிவாதி முகவரியை மாற்றிவிட்டார்.

பிரதிவாதி முகவரியை மாற்றிவிட்டார் என்றால் நீதிமன்ற வழக்கில் கொடுக்கபட்ட முகவரியை மாற்றி தற்போதைய முகவரியை வழக்கில் இணைக்க நீதிபதி உத்தரவிடுவார்.


2. பிரதிவாதியின் முகவரி தவறு.

பிரதிவாதியின் முகவரி தவறாக எழுதி சம்மன் அனுப்பபட்டு இருந்தால் சம்மன் அந்த முகவரிக்கு சென்றுவிட்டு தவறான முகவரி என்று ரிட்டன் நீதிமன்றத்திற்கு அனுப்பபடும் அதாவது பிரதிவாதியின் முகவரியில் தெருக்கள் அல்லது அஞ்சலகம் போன்றவை தவறாக எழுதி இருந்தால் அதை குறிப்பிட்டு நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பபடும் அதை நீதிபதி விசாரித்து வழக்கில் சரியான முகவரியை திருத்தம் செய்ய உத்தரவிடுவார்.

3. வீட்டில் இருந்து கொண்டே பிரதிவாதி இல்லாததுப் போல் ஏமாற்றி வாங்காமல் இருக்கிறார் என்ன ஆகும்?

வீட்டில் இருந்து கொண்டே பிரதிவாதி இல்லாதது போல் சம்மனை வாங்காமல் ஏமாற்றினால் நீதிமன்றத்தில் சம்மன் பதிவு தபாலில் அனுப்படும் அதை தாபால்காரர் வீட்டிற்கு கொணடு வரும் போது கதவு மூடி இருந்தாலோ அல்லது வெளிநாட்டிற்கு சென்றுவிட்டாலோ அதை தபால்காரர் கதவு மூடியிருந்தது (Door closed) என்று சம்மனை திருப்பி (return) நீதிமன்றத்திற்கே அனுப்பி விடுவார் அதை பெற்று கொண்ட நீதிபதி திரும்பவும் புதிய சம்மன் அனுப்ப உத்தரவிடுவார்.

4. வீட்டிலிருந்து கொண்டு சம்மனை வாங்க மறுத்து விட்டால். 

 நீதிமன்றம் மூலமாக வழக்கில் அனுப்பபடும் சம்மனை வீட்டிலிருந்து கொண்டே தபால்காரர் கொண்டு வரும் போது வாங்க மறுத்து விட்டால் அந்த சம்மன் திரும்பவும் (return) நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பபடும் அதில் மறுத்து விட்டார் (refused) என எழுதி திருப்பி அனுப்புவார். இது பிரதிவாதிக்கு எதிராக அமையும் வழக்கை பற்றிய விபரம் தெரிந்ததால் தான் சம்மனை வாங்கவில்லை என்று நீதிபதி கருதி வழக்கில் பிரதிவாதியை செட் எக்ஸ்பார்ட்டியாக (ex parte) அறிவிப்பார் இதன் காரணமாக பிரதிவாதியின் வாதத்தை கேட்காமலேயே வழக்கில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கபடும்.

மேலே கூறிய காரணங்கள் மிக முக்கியமானவை இதில் சில காரணங்களுக்காக பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியும் அதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

 *எந்தெந்த காரணங்களுக்கு பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை பெற முடியும்?* 

பிரதிவாதியின் முகவரியை மாற்றிவிட்டார் என்றாலோ தற்போதைய முகவரி தெரியாத காரத்திற்காக திரும்ப திரும்ப புதிய சம்மனை அனுப்பாமல் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை (paper publication order) பெறலாம். 

பிரதிவாதியின் முகவரி தவறு என்றால் அதை திருத்தம் செய்தும் பிரதிவாதிக்கு சம்மன் கிடைக்கவில்லை என்றால் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டர் உத்தரவை பெற முடியும். 

வீட்டில் இருந்து கொண்டே பிரதிவாதி இல்லாததுப் போல் ஏமாற்றி வாங்காமல் இருக்கிறார் என்றால் திரும்ப திரும்ப மூன்று முறை புதிய சம்மனை அனுப்பியும் பயனில்லை என்றால் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை பெறமுடியும்.

 *ஒருமுறை சம்மன் (சம்மன்ஸ்) அனுப்பியும் பிரதிவாதி வாங்கவில்லை என்றால் உடனடியாக பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை பெற முடியுமா?* 

  நீதிமன்றம் மூலமாக சம்மன் ஒருமுறை அனுப்பிய பிறகு அதை பிரதிவாதி பெறவில்லை என்றால் அதன் காரணத்தை கவனிக்க வேண்டும். பிரதிவாதி சம்மனை வாங்க மறுத்து இருந்தால் அவருக்கு எதிராக ஒருதலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படும். மாறாக வேறு காரணங்களுக்காக பிரதிவாதிக்கு சம்மன் கிடைக்கவில்லை என்றால் திரும்பவும் புதிய சம்மனை அனுப்பச் சொல்லி நீதிபதி உத்தரவிடுவார் இதைப்போல இரண்டு அல்லது மூன்று வாய்ப்புகள் பிரதிவாதிகளுக்கு வழங்கப்படும்.

அனுப்பிய புதிய சம்மன்களும் (சம்மன்கள்) நீதிமன்ற வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருக்கும் அந்த சூழ்நிலையில் வாதி பேப்பர் பப்ளிகேஷனுக்கு மனு தாக்கல் செய்யும்போது அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி பேப்பர் பப்ளிகேஷனுக்கு உத்தரவிடுவார் இதனால் சம்பந்தப்பட்ட வழக்கின் தகவல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தோன்றாத போது அவருக்கு எதிராக ஒருதலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்ற வழக்குகளை நிராகரித்தால் அந்த வழக்குகளை நடத்தாமல் தனது பக்க ஆவணங்களை சமர்ப்பித்து தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்து தனது வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக தீர்ப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படும்.

ஆனால் ஓரு முறை சம்மனை அனுப்பியவுடன் உடனடியாக பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை பெற முடியாது. அதற்கு நீண்ட நடைமுறைகள் இருக்கிறது அதை பின்பற்றி தான் பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியும்.

 *எந்த சட்டத்தின் அடிப்படையில் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டர் உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியுமா?* 

நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிரதிவாதிக்கு வழக்கு விசாரணைக்கு பலமுறை சம்மன் அனுப்பி அவருக்கு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் இந்த பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை பெற முடியும் ஆனால் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அது எந்த சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்ய வேண்டும் இந்திய சிபிசி சட்டம் அதாவது இந்திய உரிமையியல் நடைமுறைச் சட்டம் ஆர்டர் (ஆர்டர்) 5 விதிகள் ) 20 இதற்கான வழிமுறைகளை வரையறுத்துக் கூறுகிறது இதை சப்ஸ்டிடியூடெட் சர்வீஸ் (பதிலீடு சேவை) என்று சிபிசி சட்டம் சொல்கிறது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

பந்தலூர் 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...