பொதுவான அறிவுரைகள்

 🔺பொதுவான அறிவுரைகள்❗


🌿மகப்பேறு என்பது மகிழ்ச்சியான, உன்னதமான அனுபவம். அதை கணவன், மனைவி மற்ற உறவினர்கள் யாவரும் அனுபவிக்க வேண்டும்.


🌿மனைவியின் உடல் எடை கூடுவது, முகம் வெளுப்பது, மார்பகம் பெரிதாவது, இடுப்புப் பகுதி பெருப்பது போன்றவை கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சாதாரண மாற்றங்கள். இதனை சுமையாக எண்ணி பயந்துவிடக்கூடாது. 


🌿வீட்டில் உள்ள அம்மா, மாமியார், அத்தை, பாட்டி போன்றோர் இதுபற்றிய விவரங்களை கர்ப்பிணிக்கு எடுத்துச் சொல்லி, அவள் மனத்தில் உள்ள பயத்தைப் போக்க வேண்டும்.


🌿அதேபோல, மருத்துவரிடம் செக்கப்புக்குச் செல்லும்போது தனக்குள்ள பிரச்னைகளை சந்தேகங்களை விவரமாக எடுத்துச் சொல்லி சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். மருத்துவரும் பொறுமையுடன் தாயின் பயத்தைப் போக்கி, பேறுகாலத்தை தைரியத்துடன் எதிர் நோக்கத் தயார் செய்ய வேண்டும்.


🌿மனைவியின் மாறும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆதரவாகக் கணவன் நடந்துகொள்ள வேண்டும். கருவுற்ற பெண் அடிக்கடி கோபம் கொள்வது, எரிச்சல்படுவது, காரணம் இல்லாமல் அழுவது, அதிக உணர்ச்சி வசப்படுவது இயற்கையே! இந்த மாறுபட்ட நடவடிக்கைகளுக்குக் கணவன், அம்மா, மாமியார், உறவினர்கள் எல்லோரும் அவளோடு ஒத்துப்போய் உதவ வேண்டும். கர்ப்பிணி, சாதாரண மனநிலையில் இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.


🌿குமட்டல், வாந்தி, இடுப்பு, முதுகு, அடி வயிற்றுப் பகுதியில் வலி, மலச்சிக்கல், கால் குடைச்சல் போன்றவை இயற்கையாகும்

குமட்டல், வாந்தி குறைய, காலையில் அதிக நேரம் வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகம் தண்ணீர் ஆகாரம் எடுத்துக்கொள்வது, மனத்துக்குப் பிடித்ததை சாப்பிடுவது நல்லது. அதிகமான புளிப்புச் சுவை, கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கலாம்.


🌿பாதுகாப்பான உடற்பயிற்சி தேவை. படுக்கும்போது ஒரே பக்கமாக அதிக நேரம் படுக்காமல், கை கால்களை அடிக்கடி நீட்டி மடக்கிவிடுவதால் முதுகு வலி, கை கால் வலி இருக்காது. வலி மாத்திரைகள் அதிகம் சாப்பிடக்கூடாது


🌿கால் பாதம் லேசாக வீங்கும். அதைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. விரிந்து வரும் கருப்பையால், கால்களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் அழுத்தப்பட்டு, நிணநீர் சரியாக மேலேறி வடியாததால் கால் வீக்கம் வரலாம். காலை நீண்ட நேரம் தொங்கப்போடாமல் இருக்கலாம். உட்காரும்போதோ படுக்கும்போதோ கால்களைச் சற்றே உயரமாக வைத்துக்கொண்டால் இந்த வீக்கம் வடிந்துவிடும். நாளாக நாளாக வீக்கம் அதிகமாகி உடல் பூராவும் வீக்கம் இருந்தால், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவைப்படும். சொல்லி சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். மருத்துவரும் பொறுமையுடன் தாயின் பயத்தைப் போக்கி, பேறுகாலத்தை தைரியத்துடன் எதிர் நோக்கத் தயார் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...