கூடலூர் அருகே புத்தூர்வயல் அரசு உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.
உலக மண் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஆல் த சில்ரன் பள்ளி தேசிய பசுமை படை ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பள்ளி நுகர்வோர் மன்றம் மற்றும் தேசிய பசுமை படை பொறுப்பு ஆசிரியர் பிரதீப் வரவேற்றார்
ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் சுரேஷ் ஆல் தி சில்ட்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் தலைமை தாங்கி பேசும்போது மாணவர்கள் தரமான நுகர்வோர்களாக மாற வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் செயல்படுத்தப்படுகிறது மாணவர்கள் நுகர்வோர் கல்வி விழிப்புணர்வு பெற்று தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். காலாவதி உணவுப் பொருட்களையும், தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். இதனால் பணமும் விரையமாவதுடன் உடலுக்கு நோய்களும் ஏற்படும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர்கள் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளிடம் சுட்டிக்காட்ட முன்வர வேண்டும் இதன் மூலம் பல்வேறு குறைபாடுகள் தவிர்க்க முடியும். அந்தந்த துறைகளில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவுக்கும் புகார்களை பதிவு செய்யலாம்.
அதன் மூலம் சம்பந்தபட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்துவார். மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம் அதுபோல மக்களுக்கு உணவு அளிக்கக்கூடிய வசிப்பிடம் தந்துள்ள மண்ணை பாதுகாக்கவும், மண்வளம் பாதுகாக்கவும் மாணவர்களின் பங்களிப்பு அவசியமாகிறது இதன் அடிப்படையில் மண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை மாணவப் பருவத்திலேயே தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரசாயன கலந்த பொருட்கள் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பொருட்களை தவிர்த்து நீண்ட பயன்பாடுகள் கொண்ட மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி குப்பைகளை குறைக்க வேண்டும். குப்பைகளை தெருக்களில் போடாமல் அதற்காக அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போடவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து இயற்கை மண்வளம் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளி நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் தங்க அருணா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment