நாளிதழ் செய்திகள்🌷 வெள்ளி - ஆகஸ்டு 11

🌹 WWW.TAMILNEWSANCHORS.COM 🌹
         🌷நாளிதழ் செய்திகள்🌷
            வெள்ளி - ஆகஸ்டு 11
-----------------------------------------------------------
அதிமுக துணைப் பொதுச்செயலராக தினகரனை நியமித்தது செல்லாது- எடப்பாடி கோஷ்டி தீர்மானம்

தினகரனை நீக்கி ஓபிஎஸ் அணியின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி

சசிகலா குடும்பத்தையே அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும்... நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ் கோஷ்டி

ஜெயலலிதா இடத்தில் யாரையும் அமர்த்த விரும்பவில்லை சசிகலா, தினகரனை ஏற்க முடியாது – எடப்பாடி தலைமையில் தீர்மானம்

எடப்பாடி கோஷ்டியின் எனக்கு எதிரான தீர்மானம் செல்லாது: தினகரன் திட்டவட்டம்

என்னை நீக்க சசிகலாவை தவிர யாருக்கும் அதிகாரமில்லை நான் நினைத்தால் எடப்பாடி நீடிக்க மாட்டார் : தினகரன் பதிலடி

தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால் எடப்பாடி நாற்காலி ஆட்டம் கண்டுவிடும்... டிடிவி தினகரன் மிரட்டல்

எடப்பாடி உட்பட யாராக இருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை: தினகரன் வார்னிங்!

செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசனுக்கு சசிகலா கட்சி பதவி கொடுத்ததும் செல்லாது...அன்வர் ராஜா அதிரடி

இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஹமீது அன்சாரிக்கு பேச்சுக்கு பாஜக கண்டனம்

ஜெயலலிதாவை 16 மாவட்டச் செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கி பொதுச்செயலராக்கியதே நான்... திவாகரன் அதிரடி

முரசொலி விழா மேடையின் கீழே அமர்ந்திருந்த ரஜினியை அழைத்து மரியாதை செய்த ஸ்டாலின்

சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை.. அம்பலப்படுத்திய தேர்தல் ஆணையம்

நீட் தேர்வுக்கு எதிராக வைகோ தலைமையில் போராட்டம்.. மோடி கொடும்பாவி எரிப்பு.. கைது.. பதற்றம்!

கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை அளிக்காத விவகாரம்... மன்னிப்புக் கோரினார் பினராயி விஜயன்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் சுற்றறிக்கைக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவுக்கு தடை கிடையாது...கைவிரித்த சுப்ரீம் கோர்ட்! - மாணவர்கள் அதிர்ச்சி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு.. ஆக.14ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!

அரசின் ஒப்புதலின்றி இயங்கும் பள்ளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

எந்த பொதுத் தேர்வையும் எதிர்கொள்ள தமிழக மாணவர்களை அரசு தயார்படுத்தும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்களுக்குத் தொடர்விடுமுறை -980 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்!

திருப்பூரில் பராமரிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து வயதான தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை

இரண்டு முறை தொடர்ந்து குடியரசு துணைத்தலைவராக பதவி வகித்த ஹமீத் அன்சாரி இன்றுடன் ஓய்வு! வெங்கய்யா நாயுடு இன்று பதவியேற்பு

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரும் விடுதலை! – பெற்றோர் கொதிப்பு

ஓஎன்ஜிசி நிறுவனத்தைக் கண்டித்து 82வது நாளாக கதிராமங்கலம் மக்கள் போராட்டம்!

இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது: 50 சதவீதம் இடங்களில் சேர ஆள் இல்லை

அமிர்தசரஸ் விரைவு ரயிலில் வெடிகுண்டு : உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு

சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்கட்சிகள் கூட்டம்

சீனாவில் சுவரின் மீது பேருந்து மோதி விபத்து: 36 பேர் உயிரிழப்பு

வாகன இன்சூரன்ஸ் புதுப்பிக்க மாசுகட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

முரசொலி 100 ஆண்டுகாலம் மட்டுமல்ல தமிழ் இனம் வாழும் வரை நீடுழி வாழ வேண்டும் : பத்திரிகை ஆசிரியர்கள் புகழுரை

கர்நாடக விவசாயிகள் நலனை பலி கொடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம் - முதல்வர் சித்தராமையா கருத்து

எஜமானர்களின் கட்டளையை நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி- துரோகிகள் வீழ்ந்து போவார்கள்….நாஞ்சில் சம்பத் ஆவேசம்

திமுக மாவட்ட செயலாளர்களுடன் செயல்தலைவர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

டெல்லி அருகே மாவட்ட கலெக்டர் தற்கொலை: ரெயில்வே தண்டவாளத்தில் சடலம் கண்டெடுப்பு


முரசொலி பவள விழா: அரசியல், கட்சி பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்த்தியவர்களுக்கு நன்றி- கருணாநிதி கடிதம்

தமிழகத்தில் நீர் மேலாண்மை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா: நினைவு பரிசு வழங்கினார் பிரதமர் மோடி

பாகிஸ்தான் புதிய பிரதமர் அப்பாஸிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லியில் தமிழக விவசாயிகள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் – தமிழக விவசாயிகளை கண்டுகொள்ளாமல் அவமதிக்கும் மத்திய அரசு

மதம், மொழி பெயரில் ஒற்றைக் கலாச்சாரத்தை திணித்தால் இந்தியா வெடித்துச் சிதறும்: சீதாராம் யெச்சூரி எச்சரிக்கை

பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசயம் மாறிவிடுகிறது – சசிகலா சகோதரர் திவாகரன் பரபரப்பு பேட்டி

மு.க.ஸ்டாலினுக்கு என்மீது காழ்ப்புணர்ச்சிக் காய்ச்சல்: அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்

பாகிஸ்தானின் அன்னை தெரசா டாக்டர் ரூத் பாவ் காலமானார்

பாஜக அரசு பொதுத் துறை நிறுவனங்களை அழிக்கிறது: பிரகாஷ் காரத்

தமிழகத்தில் ஆகஸ்டு 12 முதல் ஆகஸ்டு 15 வரை நான்கு நாள்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

ரஜினி, கமல் முரசொலி விழாவிற்கு வந்ததை அரசியலாக்க வேண்டாம்: பிரபு

முரசொலி வளாகத்தில் கலைஞரின் மெழுகு சிலை திறப்பு

இரு அணிகளும் இணைந்தால், அது மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பமாகவே இருக்கும்: ஓ.பன்னீர் செல்வம்

சிலை கடத்தலை தடுக்க ஆகஸ்ட் 24-க்குள் ஐ.ஜி  பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு: உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமி எப்போது தேர்தல் ஆணையரானார்?டிடிவி தினகரன் நறுக்

சசிகலா நியமித்தவர்கள் செல்லாது என்றால்…சசிகலாவால் தேர்வுசெய்யப்பட்ட எடப்பாடி ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கவேண்டும் – முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்

கருணாநிதி மெளனத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடப்பது அரசியல் இல்லை: மு.க. அழகிரி

நள்ளிரவில் ஏன் வெளியே வருகிறீர்கள் என்று கேட்ட பா.ஜனதாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இளைய தலைமுறை பெண்கள் பதிலடி

அமித்ஷா நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார், உங்களுடைய ஓய்வு நேரம் முடிந்துவிட்டது எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

கேரளாவில் வைரஸ் காய்ச்சலுக்கு 22 லட்சம் பேர் பாதிப்பு, 420 பேர் உயிரிழப்பு

தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும் கமலஹாசன் பேச்சு

அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம் - திவாகரன் பரபரப்பு பேட்டி

முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன கருணாநிதி உருக்கம்

அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் -டெல்லியில் இரு அணி தலைவர்களும் மோடியை சந்தித்தப்பின் முடிவு எட்டப்படும் என தகவல்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...