இழப்பீடு நுகர்வோர் கோர்ட் உத்தரவு:

பேன் ரெகுலேட்டருக்கு ரூ.20 கூடுதல் வசூல் ரூ.14,020 இழப்பீடு நுகர்வோர் கோர்ட் உத்தரவு:

திருநெல்வேலி
பேன் ரெகுலேட்டர் வாங்கியதில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.20 கூடுதலாக வசூலித்த நெல்லை எலக்ட்ரிக்கல் கடைக்கு ரூ.14 ஆயிரத்து 20 இழப்பீடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை சேர்ந்தவர் இசக்கி. இவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நெல்லையில் உள்ள பிரபல எலக்ட்ரிக் கடையில் ரூ.120க்கு பேன் ரெகுலேட்டர் வாங்கியுள்ளார். ஆனால் ரெகுலேட்டர் பாக்ஸில் விலை ரூ.100 என குறிப்பிடப்பட்டிருந்தது. 20 ரூபாய்தன்னிடம் கூடுதலாக வாங்கியிருப்பதாக கடைக்காரருக்கு இசக்கி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பதில் தகவல் ஏதும் வராததால் நெல்லை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பு சார்பில் ரூ.1 லட்சம் நஷ்டஈடு கேட்டு
இசக்கி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் ஜாபர்அலி ஆஜரானார்.வழக்கை நுகர்வோர் கோர்ட் நீதிபதி கிள்ளிவளவன், உறுப்பினர் ராணி ஆகியோர் விசாரித்து, மனுதாரருக்கு
இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்கவும், மனரீதியான உளைச்சலுக்கு ரூ.4 ஆயிரமும், ரெகுலேட்டருக்கு கூடுதலாக வசூலிக்ககப்பட்ட தொகை ரூ.20 சேர்த்து மொத்தம் ரூ.14 ஆயிரத்து 20ஐ ஒரு மாதத்திற்குள் வழங்கவேண்டும் என எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளருக்கு கோர்ட் உத்தரவிட்டது.
Source: http://www.dinamalarnellai.com/web/districtnews/4648

எனது முந்தைய பதிவு:

கூடுதல் விலைக்கு குழல் விளக்கு விற்பனை செய்த கடைக்கு. ரூ 5,000 அபராதம் விதித்தது நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம்,
https://www.facebook.com/groups/685954204947280/permalink/690308984511802/

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...