திறனாய்வுத் தேர்வுகள் ஓர் அறிமுகம்

talent exams introduction in tamil திறனாய்வுத் தேர்வுகள் ஓர் அறிமுகம்

திறனாய்வுத்தேர்வுகள் அறிவோம்



           8 ஆம் வகுப்பு பயிலும்  அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்


   10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும்  பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்


  இதெல்லாம் சாத்தியமா? என்று ஐயம் தோன்றுகிறதா ?


    இது சாத்தியமே எப்படி என்றால் பள்ளியில் கற்கும் மாணவர்கள்

 அரசால் நடத்தப்படும் திறனாய்வுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் .


என்ன தேர்வு? யார் யார் எழுதலாம்?எப்படி வினாக்கள் இருக்கும்? போன்ற தங்களின் ஐயங்களை களையவே இந்த பதிவு.




   மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE )  என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .




தேர்வின் பெயர்: தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS

Ø  தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:


    அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள்


Ø   தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:


  7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்


  தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.


  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


  அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 50


Ø  தேர்வு நடைமுறை:


   ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


ü  மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST


 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்



இடைவேளை – 20 நிமிடங்கள்


ü  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST


 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்



Ø  தேர்ச்சி முறை:

 MAT மற்றும் SAT  தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .

(தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்).


 மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு.


  ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.


  நாடு முழுவதும் 1,00,000மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )  தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.



தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS



Ø        தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:


    அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/  உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம்  வகுப்பு மாணவர்கள்


Ø   தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்:


  8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள்


 தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும்.


  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


 ஜூலை அல்லது செப்டமப்ர்  மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 10


Ø  தேர்வு நடைமுறை:


  ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.



  மனத்திறன் தேர்வு (MAT) - MENTAL ABILITY TEST

 90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


இடைவேளை – 20 நிமிடங்கள்


  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்



Ø  தேர்ச்சி முறை:


  மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர்

.

  வருவாய் மாவட்டத்திற்கு 50மாணவர்கள் மற்றும் 50மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.


  ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும்.






தேசிய திறனாய்வுத்தேர்வு

 ( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE



Ø        தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:



        அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்


               NTSE -STAGE 1 – அந்தந்த மாநில அரசால் நடத்தப்படும்


Ø  தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :


  ஜூலை அல்லது செப்டம்பர்  மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.


  www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல்  பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் .


  தேர்வுக்கட்டணம் ரூ. 50


Ø  தேர்வு நடைமுறை:


  ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.


   90 வினாக்கள் - 90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


  ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50மதிப்பெண்கள்


பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

 90 வினாக்கள் -  90மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


Ø  தேர்ச்சி முறை:


ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும்.


 ஆங்கில மொழித்திறன் தேர்வில் 50மதிப்பெண்களுக்கு 40% மதிப்பெண் பெற்றாலே தகுதியாக கருதப்படும். (இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றிருந்தால் போதும்.)


 மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.




NTSE - STAGE - 2 –  

               மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும்


  தேர்வுக்கட்டணம்¸கிடையாது.


முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

   ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்

  (objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.


  வினாத்தாள் இந்தி  மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.



     மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST

 50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்


 ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST –

 50 வினாக்கள் - 50மதிப்பெண்கள் - 45 நிமிடங்கள்


  பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST

100 வினாக்கள் -  100 மதிப்பெண்கள் - 90 நிமிடங்கள்


தவறான விடைகளுக்கு 1/3பங்கு மதிப்பெண் ( Negative Marks) குறைக்கப்படும்.


Ø  தேர்ச்சி முறை:

 MAT மற்றும் SAT  தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மாற்று மாற்றுதிறனாளிகள் 32% பெற்றால் போதும்).


 ஆங்கில மொழித்திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது.


 மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களின்  தரநிலை அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்.


  தேர்வு செய்யப்படும் மாணவர்களில்

·          15% தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்

·          7.5% பழங்குடியின் பிரிவினருக்கும்

·          3%  மாற்றுதிறனாளிகளுக்கும் சலுகை உண்டு.



ü   11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்ந்தோறும் ரூ. 1250வீதமும்


ü  இளங்கலை UG மற்றும் முதுகலை PG –பயிலும்போது  மாதந்தோறும் ரூ. 2000வீதமும்


ü   முனைவர் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை படியும் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.



திறனாய்வுத்தேர்வுகளில் வெற்றி பெற குறிப்புகள் :




    மேற்கண்ட அனைத்து திறனறித்தேர்வுகளிலும்  உள்ள படிப்பறிவுத்திறன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் முந்தைய வகுப்புகளின் பாடப்பகுதிகள் மற்றும் அந்த ஆண்டிற்கான பாடப்பகுதிகளில் தெளிவான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.


    படிப்பறிவுத்திறன்   (SAT) தேர்வில்


அறிவியல்


கணிதம்


சமுக அறிவியல்


ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.



மனத்திறன் தேர்வில் ( MAT ) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் பின்வரும் திறன்களை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும்.


Ø  பகுத்தாயும் திறன்

Ø  காரணம் அறியும் திறன்

Ø  சிந்திக்கும் திறன்

Ø  முப்பரிமாண வெளியில் கட்சிப்படுத்தி கண்டறியும் திறன்

Ø  முன்னறிவைத் தொடர்பு படுத்தும் திறன்


  போன்ற திறன்களை வெளிப்படுத்த மனத்திதிறன் தேர்வு வினாக்களில் போதிய பயிற்சி அவசியம் ஆகும்.


  மனத்திறன் தேர்வு நன்கு வினாக்களை புரிந்துகொண்டு சரியான திறனை வெளிப்படுத்தி விடையளித்தால் மிக எளியதாக் அமையும்.


மேலும் மனத்திறன் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு  பிற்காலத்தில் அரசுப்பணிகள் தேர்வு எழுதவும், வங்கி மற்று இரயில்வே தேர்வுகளை எழுதவும், குடிமைப்பணி தேர்வு எழுதவும் பெரிதும் துணை செய்யும்.


எனவே தகுதியுடைய அனைத்து மாணவர்களும் திறனாய்வுத்தேர்வுகளில் பங்கேற்று தங்கள் எதிகாலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்.



தயாரிப்பு :


சே. கணேஷ், பட்டதாரி ஆசிரியர் ,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,
கிளரியம்
திருவாரூர் மாவட்டம்


நன்றி

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...