பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் ஆலோசனை கூட்டம்

பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய
தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மைய செயலாளர் சு. சிவசுப்பிரமணியம்
வரவேற்றார்.

தேவாலா அரசு பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்,
 கூடலூர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரன்,
சமூக ஆர்வலர் செல்வகுமார், ,
சேரம்பாடி அரசு பள்ளி ஆசிரியர் கண்ணதாசன்,
சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன்,
மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத்,
 பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் பயிற்றுனர் பூபாலன், மற்றும்
சாருஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திர்மாணம் 1 பயிற்சி மையத்திற்கு மாணவர்கள் அதிகரிக்க முயற்சி எடுத்தல்
குறித்து பேசும்போது   பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேலை வாய்ப்புகள்
மற்றும் அரசு பணி தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் எனவும்
பெற்றோர்களிடம் போட்டி தேர்வுகளின் முக்கியத்துவம் எடுத்து கூறி
மாணவர்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுதல் எனவும்
தீர்மாணிக்கப்பட்டது.

கல்லூரியில் மாணவர்களிடம் முதல்வர் அனுமதி பெற்று வகுப்பறைகளில்
விண்ணப்பம் கொடுத்து மாணவர்கள் சேர்க்கை மேற்க்கொள்ளுதல் எனவும்
தீர்மாணிக்கப்பட்டது.

திர்மாணம் 2 வரும் மாணவ மாணவிகள் தொடர் வருகையை உறுதி செய்வது குறித்து
பேசப்பட்டது,
தொடர் வருகையை உறுதி செய்ய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுதல்
மற்றும் பெற்றோரிடம் மாணவர்களின் வருகை குறித்த தகவல் உறுதிபடுத்துதல் என
தீர்மாணிக்கப்பட்டது.

திர்மாணம்  3  கட்டணம் நிர்ணயம் மற்றும் பயிற்சி வழங்குதல் குறித்து
விவாதிக்கும்போது
இப்பகுதியில் ஏழை எளிய மக்கள் அதிகம் வசிப்பதால் அவர்களிடம் கட்டணம்
வசூலிப்பது ஏற்புடையதல்ல எனவும், கட்டணம் நிர்ணயம் செய்வதன் மூலம் பலரது
போட்டி தேர்வுக்கான ஆர்வமுள்ள ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அதனால்
மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் தொடர்ந்து கட்டணமில்லா
பயிற்சியை வழங்குவது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

திர்மாணம் 4  பயிற்சி வழங்குவது குறித்து பேசும்போது
வழக்கம்போல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வழங்குவது எனவும்
தற்போது பயிற்சி வழங்கி வரும் பூபாலன், சேரம்பாடி அரசு பள்ளி ஆசிரியர்
கண்ணதாசன், தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்,
மற்றும் போட்டி தேர்வுகளை எதிர்க்கொண்டு வெற்றி பெற்ற சாருஹாசன், கூடலூர்
காசிகா பயிற்சி மைய ஆசிரியர் சுரேஷ்குமார், கல்லூரி பேராசிரியர்
மகேஸ்வரன், மற்றும்

தேவைக்கேற்ப இதர ஆசிரியர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள்
மூலம் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பயிற்சி வழங்குவது என
தீர்மாணிக்கப்பட்டது.  மேலும் முக்கிய அரசு பணிகளில் உள்ளவர்கள் மூலம்
ஊக்கப்படுத்துதல் மற்றும் வழிக்காட்டல் முகாமும் நடத்துதல் எனவும்
தீர்மாணிக்கப்பட்டது.

தீர்மாணம் 5  நிதி மேம்பாட்டிற்கு  பயிற்சி மையத்திற்கு கூடுதல்
புரவலர்கள் சேர்த்து அவர்கள் மூலம் நிதிவசூலித்து தேவையான உபகரணங்கள்
வாங்குதல் புத்தகங்கள் மற்றும் தகவல்கள் தயாரித்து மாணவர்களுக்கு குறைந்த
விலையில் வழங்குதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
முடிவில் பயிற்சி மைய பயிற்றுனர் பூபாலன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...