கடன் பெறுவதற்காக வழங்கிய ஆவணத்தை தொலைத்த வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு:
வீட்டுக் கடன் பெறுவதற்காக வாடிக்கையாளர் வழங்கிய ஆவணங்களைத் தொலைத்த வங்கிக்கு, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ.8 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கோவை, பீளமேடு அருகேயுள்ள வீரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கிடுபதி. இவர் வீட்டுக் கடன் பெறுவதற்காக காளப்பட்டியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளையை கடந்த 2008-ஆம் ஆண்டில் அணுகியுள்ளார். வீட்டுக் கடன் பெறுவதற்காக தனது சொத்துப் பத்திரம், வங்கி அதிகாரிகள் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் வழங்கியுள்ளார்
ஆனால், பல மாதங்களாகியும் கடன் வழங்கப்படாமலும் ஆவணங்கள் திரும்பி வழங்காமலும் இவர்அலைக்கழிக்கப்பட்டுள்ளார். ஆவணங்களை திருப்பிக் கேட்டபோது, அவை தொலைந்துவிட்டதாக வங்கி அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து சேவைக் குறைபாடுக்காக வங்கி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெங்கிடுபதி கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன், வாடிக்கையாளரின் ஆவணத்தை தொலைத்ததுடன் அவரை அலைக்கழித்ததற்காக சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதுடன், ஆவணங்கள் தொலைந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தொலைந்த ஆவணங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Source : dinamani Published on : 21st December 2016
வங்கி சேவை குறைபாடு சார்பான எனது முந்தைய பதிவுகள்:
கடனை செலுத்தியும் ஆவணம் தராத நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/118481116832943
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688314954711205/
தொலைந்துபோன ஏடிஎம் அட்டையை உடனடியாக முடக்காத வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688190528056981/
Consumer forum imposes Rs 1 lakh fine on SBI CreditCard
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1173404539470095
ஒரிஜினல் ஆவணங்களை திருப்பி வழங்காத எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ 8 ஆயிரம் அபராதம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் தீர்ப்பு.
https://www.facebook.com/groups/685954204947280/permalink/689545991254768/

No comments:
Post a Comment