*டெங்கு எச்சரிக்கை

☠👹 *டெங்கு எச்சரிக்கை* 👹☠

நிலவேம்புக் கசாயம் குடித்துக்கொண்டு,
புகை மருந்து அடித்து விட்டால் டெங்கி காய்ச்சல் வராது என நம்பிக்கொண்டு ,

பிக்பாஸ் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள்.

உங்கள் வீட்டிலோ அல்லது பக்கத்து, எதிர் வீட்டிலோ கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு காய்ச்சல் நோயளி இருப்பின் அவருக்கு மருத்துவம் செய்து காப்பாற்றினால் மட்டும் போதாது.

உங்கள் பக்கத்து, எதிர் வீடுகளில் வீட்டின் உள்ளே கொசு ஒழிப்பு புகை (Indoor Fogging) அடிக்க வேண்டும்.

அதற்கு சுகாதார ஆய்வாளர்களிடம் சொல்லவும். புகை மருந்து முதிர் கொசுவை மட்டுமே கொல்லும்.

தண்ணீரிலுள்ள ஆயிரக்கணக்கான  கொசு புழுக்களையோ, முட்டையைகளையோ பாதிக்காது.

அவை ஒரு வாரத்தில் கொசுக்களாக பறக்க ஆரம்பித்து விடும்.

மேலும் அடிக்கடி புகை மருந்து அடிப்பதால் சுவாச பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் புகை மருந்து பிரச்சனைகளை அதிகரிக்கும்.


*அதற்கு நாம் செய்ய வேண்டியது, கொசுக்களின் உற்பத்தியை தடுக்க அதன் முட்டை மற்றும் புளு நிலையிலேயே அழிப்பது. எப்படி?*

உங்கள் வீட்டில் மூடி இல்லாமல் திறந்த நிலையிலுள்ள குடிநீர் மேல்தேக்கத்தொட்டி (OHT), கீழ்தேக்கத்தொட்டி  (Sump),

நன்னீர் தேங்க வாய்ப்புள்ள குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம்,

மணி பிளான்ட் சாடிகள், மாடியில், கூரையில்,
வெட்ட வெளியில்
போட்டு வைத்துள்ள பழைய டயர்களில்,

இளநீர் கூடுகளில், தேங்காய் ஓடுகள் கொட்டாங்குச்சி,
தூக்கி எறியப்பட்ட தேனீர் குவளைகள், டம்ளர்கள்,
உடைந்த பாட்டில்கள்,

உரல், சட்டி, பானை, வாளி  போன்றவற்றில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட சிறப்பான இடங்களாகும்.

கொசு முட்டை ஒரே வாரத்தில் லார்வா, பியூபா, வளர்ந்த கொசு என பல்கிப் பெருகும்.

ஒரு வளர்ந்த கொசு 3 வாரங்கள் உயிர் வாழும். ஒரு முறைக்கு சராசரியாக 200 கொசு முட்டைகள் என மூன்று முறை கொசு முட்டை  இடும்.

முட்டை வளர்ந்த கொசுவாக மாற ஒரு வாரம் போதும்.

ஏடிஸ் கொசு நன்னீரில் உற்பத்தியாகும் கொசு. சாக்கடையில் கழிவு நீரில் உற்பத்தி ஆவதில்லை.

வீட்டுக்கு உள்ளேயே கூட உற்பத்தியாகும்.

எனவே ஏடிஸ் கொசு ஒழிப்பில், டெங்கி காய்ச்சல் தடுப்பில்  பொதுமக்களாகிய நமக்கு முக்கியப் பங்கு உண்டு.

நகராட்சி துப்புரவுப் பணியாளர் வீட்டிற்கு வெளியே தெருவைத் தான் கழிவுநீர் கால்வாய்கள் , அமைப்புகள், போன்றவற்றைத் தான் சுத்தம் செய்வார்.

வீட்டுக்குள்ளே , புழக்கடையில், மாடியில் சுத்தம் செய்வது வீட்டில் உள்ளோரின் கடமை.

எனவே வீட்டிற்கு உள்ளே வெளியே, மேலே குறிப்பிடப்பட்ட பொருள்களை சுத்தம் செய்து அகற்றுங்கள்.

உரல், வாளி, தொட்டி போன்றவற்றை கவிழ்த்துப் போடவும்.

தண்ணீர் தொட்டி, சம்ப், ஜன்னல் சன் ஷேட் (Sun-shade) இவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்யவும்.

அவற்றின் உள்சுவற்றை தேங்காய் நார் கொண்டு தேய்த்து கழுவி விடவும். உங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியிலும் குளோரினேசன் செய்யலாம்.

இப்படியாக , Anti-larval work கொசுப்புழு ஒழிப்புப் பணியை வாரம் ஒருமுறை நாம் அனைவரும் செய்வது தான்
டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர உருப்படியான வழியாகும்.

~அதைவிட்டு விட்டு, அரசையும், மருத்துவரையும், மருத்துவத்துறையைும் குறைசொல்லிப் பயனில்லை.~

குறைசொல்லும் நேரத்தில் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சுற்றிப் பாருங்கள்.

_சமூகப் பங்களிப்பு இன்றி கொள்ளை நோய்களைத் தடுக்க இயலாது._

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...