அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
கீழ்கண்ட உறுதிமொழியை
தேசிய கொடியை ஏற்றிய பின் அனைவரும் வாசித்து ஏற்றுக்கொள்ளச் செய்தால் நன்றாக இருக்கும்.
$#################
அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 51 (அ) படி
அடிப்படை குடிமைக் கடமையை ஏற்கும் உறுதிமொழி
############################
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடந்து, அதன் குறிக்கோள்களையும், அரசியல் அமைப்புச்சட்டத்தின் பல்வேறு அமைப்புகளையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிப்பேன்.
நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட உன்னதமான குறிக்கோள்களைப் போற்றி அதன்படி நடப்பேன். இந்தியாவின் இறையான்மையையும் முழுமையையும் கடைபிடித்துக் காப்பேன்.
நாட்டைப் பாதுகாத்து, நாட்டுப் பணி ஆற்றுவதற்கென்று அழைக்கப்படும் பொழுதெல்லாம் உடனுக்குடன் பணியாற்றுவேன்.
மதம், மொழி, இனம், போன்ற வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் அனைவரிடமும் மனப்பூர்வமான சகோதரபாவத்தையும் நல் இணக்கத்தையும் வளர்ப்பேன்.
மகளிரின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் பழக்க வழக்கங்களைக் கைவிடுவேன்.
பன்முகத் தன்மையுள்ள நமது கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாப்பேன்.
இயற்கைச் சுற்றுச் சூழலையும், ஆறுகள், காடுகள், வன உயிர்கள் ஆகியவற்றையும் பாதுகாத்து மேம்படுத்துவேன்.
உயிரினங்கள் அனைத்திடமும் பரிவு காட்டுவேன்.
அறிவியல் மனப்போக்கு, மனித நேயம், ஆராய்ச்சிகளிலும் சீர்திருத்தங்களிலும் ஆர்வம், போன்ற பண்புகளை எந்நாளும் வளர்ப்பேன்.
பொதுச் சொத்தை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பேன். வன்முறையை அறவே தவிர்ப்பேன்.
நாடு தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் வகையில் தனி மனித மற்றும் கூட்டுச் செயல்பாடுகள் அனைத்துத் துறைகளிலும் உன்னதத்தை அடைய ஓயாது பாடுபடுவேன்.

No comments:
Post a Comment