அம்மன்காவு அங்கன்வாடி திறக்க கோரிக்கை


பந்தலூர் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது

இங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடியை தொண்டு நிறுவனம் நடத்தி வந்தது

அதில் ஆசிரியராக பணிபுரிந்த லட்சுமி என்பவர் ஓய்வு பெற்றதால் எந்தவித தகவலும் இன்றி அங்கன்வாடி மூடப்பட்டது

இப்பகுதியில் மீண்டும் அங்கன்வாடியை திறந்து செயல்படுத்த வேண்டும் என பலமுறை கேட்டும் அதனை திறக்கவில்லை

இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் தனியார் பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றனர்

அரசு பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கை குறைகின்றது

மேலும்
இப்பகுதி குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு மற்றும் இதர பொருட்கள் கிடைப்பதில்லை

இப்பகுதியில் தற்போது 15 குழந்தைகள் உள்ளனர்.

ஆதிவாசி குழந்தைகளும் உள்ளனர்

அங்கன்வாடி திறந்து செயல்படுத்தினால்

இன்னும் அதிகமான குழந்தைகள் வருவார்கள்.

அரசால் கட்டிக்கொடுத்த கட்டிடம் உள்ளது.

இப்பகுதி குழந்தைகள் நலன் கருதியும்

அரசு பள்ளியின் சேர்க்கை அதிகரிக்கவும்

விரைவில் அங்கன்வாடி திறந்து செயல்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
   


சு. சிவசுப்பிரமணியம் பொ
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 
மாநில அரசு அங்கீகாரம் பெற்றது.
பந்தலூர் நீலகிரி 643233

http://cchepnlg.blogspot.in 
94885 20800/ 94898 60250

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...