2 பொண்டாட்டி சொத்து யாருக்கு

"ஒரு வீட்ல ரெண்டு பொண்டாட்டி - சொத்து யாருக்கு? சட்டம் சொல்லும் ஷாக் தீர்ப்பு!"

"முதல் பொண்டாட்டி: '20 வருஷம் கஷ்டப்பட்டு கட்டுன வீடு. இவளுக்கு என்ன உரிமை?'

2-வது பொண்டாட்டி: 'நானும் 10 வருஷம் கூட வாழ்ந்தேன். எனக்கும் குழந்தை இருக்கு. சொத்து வேணும்!'

புருஷன்: 'நான் செத்தா நிம்மதி'னு ஓடிட்டான்.

இப்போ சொத்து யாருக்கு சொந்தம்?"

இது தான் இன்னைக்கு பல வீட்ல நடக்குற கதை. சட்டம் என்ன சொல்லுது தெரிஞ்சுக்கோங்க.

1. 2-வது கல்யாணம் செல்லுமா? - Hindu Marriage Act 1955

முதல் மனைவி உயிரோட இருக்கும் போது, அவள விவாகரத்து பண்ணாம 2-வது கல்யாணம் பண்ணா Section 5 + 11 படி அது செல்லாது. அது கல்யாணமே இல்ல, வெறும் "சேர்ந்து வாழ்றது" தான்.

அப்போ 2-வது பொண்டாட்டிக்கு உரிமை இல்லையா? இருக்கு, ஆனா...

2. 2-வது மனைவிக்கு என்ன உரிமை இருக்கு?

A. ஜீவனாம்சம் உண்டு:
கல்யாணம் செல்லாதுனாலும், ஒரு பொண்ண ஏமாத்தி கூட வச்சிருந்தா BNSS 125 படி மாசம் ஜீவனாம்சம் கொடுத்தே ஆகணும். Supreme Court - Badshah vs Urmila Badshah Case. "கல்யாணம் செல்லாது, அதனால பணம் தர மாட்டேன்"னு தப்பிக்க முடியாது.

B. சொத்துல நேரடி பங்கு கிடையாது:
புருஷன் சுயமா சம்பாதிச்ச சொத்துல 2-வது மனைவிக்கு நேரடியா பங்கு கேட்க உரிமை இல்லை. ஏன்னா அவ சட்டப்படி "மனைவி" இல்ல.

C. பூர்வீக சொத்து கனவுல கூட கிடையாது:
புருஷனோட அப்பா-தாத்தா சொத்துல 2-வது மனைவி உரிமை கோரவே முடியாது.

3. அப்போ 2-வது மனைவியோட குழந்தை நிலைமை?

இங்க தான் சட்டம் "ட்விஸ்ட்" வைக்குது.
கல்யாணம் செல்லாதுனாலும், அந்த உறவுல பிறந்த குழந்தை "Legitimate Child" - Section 16 Hindu Marriage Act.

அந்த குழந்தைக்கு அப்பனோட சொத்துல 100% பங்கு உண்டு.
பூர்வீக சொத்துலயும் பங்கு உண்டு, சுய சம்பாத்திய சொத்துலயும் பங்கு உண்டு. Supreme Court - Revanasiddappa vs Mallikarjun 2023 தீர்ப்பு.

அதாவது, 2-வது பொண்டாட்டிக்கு நேரடியா சொத்து இல்ல. ஆனா அவ பெத்த புள்ளை மூலமா சொத்து வரும்.

4. முதல் மனைவியோட நிலைமை என்ன?

அவ தான் "சட்டப்படி மனைவி".

  1. புருஷன் சுய சம்பாத்திய சொத்து முழுக்க முதல் மனைவி + அவ குழந்தைகளுக்கு தான்.

  2. புருஷன் செத்தா, பூர்வீக சொத்துல முதல் மனைவிக்கும் சம பங்கு உண்டு.

  3. BNS 82 படி 2-வது கல்யாணம் பண்ண புருஷன் மேல 7 வருஷம் ஜெயில் + அபராதம். முதல் மனைவி Case போடலாம்.

5. புருஷன் "உயில்" எழுதி 2-வது மனைவிக்கு சொத்த கொடுக்க முடியுமா?

முடியும். புருஷன் தன்னோட சுய சம்பாத்திய சொத்தை யாருக்கு வேணாலும் உயில் எழுதலாம். 2-வது மனைவிக்கு எழுதுனா அது செல்லும்.

ஆனா பூர்வீக சொத்தை உயில் எழுத முடியாது. அது முதல் மனைவி, குழந்தைகளுக்கு தான் போகும்.

"சுருக்கமா சொன்னா:

2-வது பொண்டாட்டி ≠ மனைவி. ஆனா அவ குழந்தை = வாரிசு.
முதல் பொண்டாட்டி = Full Rights. புருஷன் = Jail Risk."

இந்த மாதிரி சொத்து சிக்கல்ல மாட்டிக்கிட்டீங்களா?

முதல் மனைவியா? 2-வது மனைவியா? இல்ல குழந்தையா?
உங்க உரிமைய தெரிஞ்சுக்க

இந்திய சட்டப்படி, முதல் மனைவி இருக்கும்போதே செய்யப்படும் இரண்டாவது திருமணம் செல்லாது (Void marriage).

எனவே, முதல் மனைவி மட்டுமே கணவரின் சொத்துகளுக்கு முழு உரிமையாளர் ஆவார்.

இருப்பினும், முதல் மனைவிக்கு விவாகரத்து அளித்த பின்னரோ அல்லது அவர் இறந்த பின்னரோ செய்துகொண்ட இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லும்;

இந்த நிலையில் இரு மனைவியரும் சொத்தில் சரிபாங்கு பெற உரிமை உண்டு.

_குறிப்பு: இது பொதுவான சட்ட விழிப்புணர்வுக்கு மட்டுமே. இஸ்லாமிய சட்டம், கிறிஸ்துவ சட்டம் வேற மாதிரி இருக்கும். உங்க Case-க்கு வழக்கறிஞரை அணுகவும்._


No comments:

Post a Comment

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006 (Food Safety and Standards Act, 2006) அத்தியாயம் – 11

  📢 நுகர்வோர் விழிப்புணர்வில் இன்று ஒரு தகவல் 🍽️ உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006 (Food Safety and Standards Act, 2006) ...