அபராத ஆயுதம்;

அபராத ஆயுதம்; சுகாதாரம் காக்க ஆயத்தம்:சுற்றுலா நகரில் தூய்மைப் பணிகள் 'ஜரூர்' நன்றி தினமலர்


Home
ஊட்டி: சுற்றுலா நகரில் சுத்தம், சுகாதாரம் காக்க, அபராதம் என்ற ஆயுதத்தை, மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது; 
விளைவு, இதுவரையில்லாத விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நீலகிரியில், 
சுத்தம், சுகாதாரத்தை பேணி காக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வீதி, தெருக்கள் என, பொது இடங்களில் குப்பை குவியல் இல்லாத நிலையை உருவாக்கி, சுகாதார சீர்கேடுக்கு விடை கொடுக்கும் பணி, மாவட்டம் முழுக்க முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஆங்காங்கே காணப்படும் குப்பை குவியல், திறந்த வெளிக் கழிவுநீர் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுப்பதன் மூலம், சுகாதாரத்தை காக்க முடியும் என்ற அடிப்படையில், 
கொசு உற்பத்தியாகும் சூழலை உருவாக்கும் வகையில், சுற்றுப்புறத்தை வைத்திருப்போருக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.
அதன் விளைவு, பல இடங்களில் உள்ள மக்கள், தங்கள், வீடுகளின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வதிலும், வளர்ந்துள்ள செடி, கொடி, முட்புதர்களை அகற்றுவதையும் பார்க்க முடிகிறது.

அபராதம் நிர்ணயம்
தொடர்ச்சியாக, அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று முறை செய்யும் அதே தவறுகளுக்கு, மாறுபட்ட அபராதத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொசு உற்பத்திக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருக்கும் தனி நபர் வீடுகளுக்கு, முதன் முறை, விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்படும். 
ரண்டாம் முறையும் அதே தவறை செய்தால், 150 ரூபாய், மூன்றாம் முறையும் தவறு கண்டறியப்பட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பிளாட்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, முதன் முறை, 500, இரண்டாம் முறை, 5,000, மூன்றாம் முறை, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வணிக பயன்பாட்டு கட்டடங்கள் மற்றும் பிளாட்களுக்கு முதன் முறை, 10 ஆயிரம், இரண்டாம் முறை, 20 ஆயிரம், மூன்றாம் முறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தொழிற்சாலைகளுக்கு, முதல் மூன்று முறை செய்யும் தவறுகளுக்கு தண்டனையாக, 25 ஆயிரம், 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐம்பது படுக்கைகளுக்கு அதிகமாக உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு, ஒரு லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ரூபாயும், 
50 படுக்கைகளுக்கு குறைவாக உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு, 25 ஆயிரம், ஒரு லட்சம், 2 லட்சம் ரூபாயும் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1,000 மாணவர்களுக்கு அதிகமாக செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு, முதன் முறை அபராதமாக, 25 ஆயிரம், இரண்டாம் முறை ஒரு லட்சம், மூன்றாம் முறை, 2 லட்சம் ரூபாயும், 
1,000 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளி கல்லுாரிகளுக்கு, 5,000, 25,000 மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறிய கடைகள், சிறிய வர்த்தகர்களுக்கு, 500, 2,000, 5,000 ரூபாய், 

சாலையோர ரெஸ்டாரண்டுகள், சிறிய தொழிற்சாலைகளுக்கு, 10,000, 25,000 மற்றும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நட்சத்திர மற்றும் அதற்கு மேலான அந்தஸ்து பெற்ற ஓட்டல், லாட்ஜ்களுக்கு, ஒரு லட்சம், 5 லட்சம் மற்றும், 10 லட்சம் ரூபாயும், 
பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் திருவிழா நுகர்வோர் விழிப்புணர்வு பட்டிமன்றம்

உதகை ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் திருவிழா நடைப்பெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா பாப்பையா தலைமை தாங்கினார்.  

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மேரி கிளாடிஸ் வரவேற்றார்.

குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு CAT அமைப்பின் மாநில பொருளாளர் சிந்து சுப்பிரமணியம். மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் மூலம் வணிக சந்தையில் நுகர்வோர் அரசராக உள்ளார்.  நுகர்வோர் அரசாராக இல்லை என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது.

இதில் பங்கேற்ற மாணவிகள் 

நுகர்வோர் அரசரே  என்ற தரப்பில் மாணவிகள் சுவேதா தீக்‌ஷா, ஷகிரா ஆகியோர் பேசும்போது

உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தும் நுகர்வோரை நம்பியே உற்பத்தி செய்யப்படுகின்றது.  நுகர்வோர்கள் பயன்படுத்தாத பொருட்கள் சந்தையில் நிற்பதில்லை. 

 நுகர்வோர்கள் விரும்பினால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்ற நிலையில் நுகர்வோர் அரசராகின்றார்.

தற்போது பொருட்களை நுகர்வோருக்கு விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து கொடுக்கின்றனர்.  

பல வடிவங்களில் புது புது ரகங்களில் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.  சந்தை போட்டியில் தேவையை விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொருட்களை தேர்வு செய்யும் வாய்ப்பு சந்தை கொடுத்துள்ளது.

தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களை வீட்டில் இருந்தபடியே பொருட்ககளை பெற வசதிகள் வந்துள்ளது.  

நுகர்வோரை நம்பியே வணிக சந்தை இருப்பதால் தற்போது நுகர்வோர்களை முக்கியத்துவ படுத்தி விற்பனை செய்கின்றனர்.  நுகர்வோர் பாதிப்புகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடுத்து நிவாரணம் பெறலாம்.  

நுகர்வோர் அரசர் இல்லை என்ற தரப்பில் மாணவிகள் A. வர்சினி, மோனிகா, ஷபினா நிஷார் ஆகியோர் பேசும்போது

நாம உபயோகபடுத்துற பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பது இல்லை.  வியாபாரிகள் சொல்லும் விலையை கேட்டு பொருட்களை வாங்கும் நிலை உள்ளது.  

புகார்களுக்கு அலைகழிப்பு மற்றும் காலதாமதம், செலவினங்கள் போன்றவை மூலம் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.  விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுகின்றனர்.  

உடலுக்கு தீங்கு என எழுதியே பொருட்களை விற்கின்றனர்.  உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவிப்பவை தடுக்கப்படவில்லை.  

நுகர்வோர் பல நிலைகளில் ஏமாற்றப்படுவதால் நுகா்வோர் அரசர் இல்லை. போலி விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் அதிகளவும் சந்தையில் விற்கப்படுகின்றது. 

நுகர்வோர் வழக்குகளிலும் நுகர்வோர் அலைகழிப்பது நடைமுறையில் உள்ளது.  தரமற்ற பொருட்கள் சந்தையில் அதிகம் காணப்படுகின்றது.   அழகிய வடிவமைப்பில் உள்ளவை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை. நுகர்வோரிடையே ஏற்ற தாழ்வை அதிகரிக்கின்றது.

நடுவராக கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கி பேசியபோது
நுகர்வோர் சட்டங்கள் பல உள்ளன.    ஆனால் அவை நுகர்வோரை சென்றடையவில்லை.  நுகர்வோர் நலன் கருதி இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், முதல் தற்போது உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் வரை அனைத்திலும் நுகர்வோர் நலன் கருதி உருவாக்கப்பட்டள்ளது.  

நுகர்வோர் இழப்பீடு பெறவும் வாய்ப்புகள் வழங்கியுள்ளது.  ஒவ்வொரு துறையிலும் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை சுட்டிகாட்டி நிவாரணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

குறிப்பாக மின்சார வாரியத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், காப்பீட்டு துறையில் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், வங்கிகளில் வங்கி வாடிக்கையாளர் குறைதீர்ப்பாயம், ஆகியன கட்டணமில்லாமல் நுகர்வோர் குறைகளை களைந்து நிவாரணம் பெற வழிவகை செய்துள்ளது.  

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு செயல்படுகின்றது.  இதற்கு புகார்களை எழுத்து மூலம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரமுடியும்.

ஆனால் நுகர்வோர் ஏமாற்றுவது தற்போது அதிகரித்து வருகின்றது.  

தற்போது மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரியில் கூட வணிகர்கள் தங்கள் விருப்பம்போல் விலையை உயர்த்தியுள்ளனர். பழைய வரியை கழிக்காமல் புதிய ஜிஎஸ்டி வரியை சேர்த்து வசூலிக்கின்றனர்.  

பல சட்டங்கள் ஏட்டளவிலலேயே உள்ளது.  இதனால் நுகர்வோர் பாதிப்புகளில் இருந்து மீள முடியவில்லை.  

அரசு துறைகளில் பல மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை.  அலைகழிக்கப்படுகின்றனர்.  

போலியான விளம்பரங்களை கட்டுபடுத்தபடவில்லை.  கள்ள சந்தை மூலம் தரமற்ற பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகின்றது.  

அரசு துறைகளும் முறையான நடவடிக்கை எடுக்க இயலாத நிலைபாடு அதிகரித்து, தரமற்ற உணவு மற்றும் கலப்பட உணவுகளும் அதிகரித்து வரும் நிலையே உள்ளது.  

தள்ளுபடி மற்றும்  இலவச விற்பனை மற்றும் விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகளை மற்ற பொருட்களில் ஏற்றி விற்பனை செய்வது என பல வகைகளில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க இயலாத நிலையே உள்ளது.   

கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாறும் மக்கள்,  விளம்பரங்களை பார்த்து தமது தேவைகளை பயன்படுத்தும் பொருட்களை தேர்வு செய்யும் நிலை  ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. 

ஏமாற்றப்படுபவர்கள் அரசர்களாக இருக்க முடியுமா , என்ற கேள்வியும் எழுகின்றது.

நுகர்வோர்கள் அரசாராக இருக்க விழிப்போடு இருத்தல் அவசியம், 

 பொருட்களை தேர்வு செய்யும் முன் அதனால் என்ன பயன், அதன் அவசியம் குறித்து ஆய்வு செய்து பொருட்களை தேர்வு செய்தல், போலியான விளம்பரங்களை நம்பாமல் இருத்தல்,  

நுகர்வோர் சார்ந்த சட்டங்களை அறித்துகொள்ளுதல்,  புகார் பதிவு மற்றும் ஆவணங்களை சரியாக வைத்து நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் வழக்கு பதிவு செய்து இழப்பீடு பெறுதல் போன்றவை மூலம் நுகர்வோர் அரசராக முடியும்.  

தினசரி அரசு சார் அறிவிப்புகள் மற்றும் நுகர்வோர் சார்ந்த தகவல்களை பத்திரிக்கைகள் மூலம் அறிந்து கொண்டு அவற்றை சேகரித்து விழிப்போடு இருக்க வேண்டும்.  

இதற்காக தான் அரசே பள்ளிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்துகின்றது.  விழிப்போடு இருப்பவர் எப்போதும் சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி நுகர்வோர் அரசராகவே இருப்பார்கள் என கூறினார்.

மாணவிகளின் நுகர்வோர் விழிப்புணர்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள், கவிதை, பேச்சு என பல்வகை நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 

குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், பேசும்போது

இயற்கை நமக்கு நல்ல உணவு, நல்ல குடிநீர், நல்ல வாழ்வுக்கு தேவையானவற்றை கொடுத்துள்ளது.  ஆனால் இயற்க்கைக்கு விரோதமாக இரசாயன உரங்கள் மற்றும் அதிக அளவு மருந்துகள் பயன்படுத்தியதால் இயற்கை உணவுகள் என தனியாக உணவுகளை தேடி செல்லும் நிலையும் உணவில் விசத்தை கலந்து உண்னும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  இன்று புற்றுநோய் அதிகரிக்க இரசாயனம் மூலம் விளையும் உணவுகளே காரணமாக அமைகின்றது.  எனவே இரசாயனம் கலந்த உணவை தவிர்க்க வேண்டும் பராம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு CAT அமைப்பின் மாநில பொருளாளர் சிந்து சுப்பிரமணியம். பேசும்போது நுகர்வோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியமாகின்றது.  பல்வகைகளில் ஏமாற்றப்படும் நுகர்வோர்கள் தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்ற சிந்தனையே இல்லாமல் ஏமாறுகின்றனர்.  பொட்டல பொருட்கள் மற்றும் எடையளவுகளில் குறையிருந்தால் தொழிலாளர் நலத்துறை மூலம் ஏற்படுத்தபட்டுள்ள tnlmts என்ற செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.  இதன் மூலம் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு CAT அமைப்பின் மாநில இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது  பொருட்களை வாங்கும்போது அதன் தரம் எடை, தயாரிப்பாளர் பெயர் முகவரி, தயாரிப்பு தேதி, காலவதி தேதி என 15க்கும் மேற்பட்ட தகவல்களை பார்த்து வாங்க வேண்டும்.  நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மாவட்டந்தோறும்  செயல்படுகின்றது. குறைந்தபட்ச கட்டணமாக  100 ரூபாய் மட்டும் செலுத்தி புகாரினை பதிவு செய்த நிவாரணம் பெறலாம்..  ஆடம்பர பொருட்களை தவிர்த்து தரமான பொருட்களை தேவைக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் நீலகிரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெட்கான் பொது செயலாளர் க. வீரபாண்டியன், கோவை கண்ணன், மற்றும்  பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள்  பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை லீலா ஜெபஸ்சீலி நன்றி கூறினார்.

Iodised salt sans iodine being sold in NilgirisPrasath SelvarajOctober 29, 201 7









    Iodised salt sans iodine being sold in Nilgiris

    Prasath Selvaraj October 29, 2017
    A good part of iodised salt sold in the Nilgiris has little iodine, a vital micronutrient the body needs. This shocking truth was revealed in tests conducted over six months by the Consumer Protection and Environmental Research Centre, Thiruvarur, and the Centre for Consumer Human Resources and Environment Protection (CCHEP), Gudalur.
    Under a special programme involving consumers, samples were collected from a number of places in the Nilgiris such as Udhagamandalam, Coonoor, Gudalur and Pandalur and tested till September.
    Incidentally, a month later is the World Iodine Deficiency Day on October 21 aimed at creating awareness about iodine whose deficiency can lead to intellectual disabilities as also goitre or enlarged thyroid gland, according to studies.
    Samples of all the types of salts sold in the Nilgiris were collected by consumers and college students as part of the World Iodine Deficiency Day and tested at the Thiruvarur laboratory.
    CCHEP general secretary S Sivasubramaniam told The Covai Post that the iodine level in the salt should be 30 ppm (parts per million) during the time of production and should not be below 15 ppm when packed and sold.
    Of the 126 samples collected, 55 were found to have iodine below the standard 15 ppm level and 38 had no iodine content at all. Salts having low iodine level are not fit for consumption, he says.
    Notices were sent to the companies producing salt below the standard iodine level. But firms put the blame on shopkeepers arguing that they stacked the packets in sacks which remained exposed to extreme sunlight or rain, resulting in low iodine level when tested, he said. But what remained inexplicable was that some of the samples had no iodine content at all.
    There were also instances of shops selling salt with fake company labels. A majority of the shops had stocked the cheaper salt used for preservation like in the case of dried fish or meat. These varieties do not have the standard iodine content, he said.
    “To ensure that iodine content in salt was maintained at the required levels, shopkeepers needed to have a safe storage mechanism in place. Action will be taken against the shopkeepers selling low quality salt,” Sivasubramaniam added.

    மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் உப்பில் 50 சதவீதம் வரை அயோடின் அளவு இல்லை ஆய்வில் தகவல்

    பத்திரிக்கை செய்தி

    மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் உப்பில் 50 சதவீதம் வரை
    அயோடின் அளவு இல்லை     ஆய்வில் தகவல்

    உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தினை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் அயோடின் உப்பு விற்பனை  ஆய்வு அறிக்கை தகவல்

    ஓவ்வொரு ஆண்டும் அக்டோபா; 21-ம் நாள் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது.  

    தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் திருவாரூர் மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின்  சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் உப்பின் தரத்தினை உறுதி செய்திடும் வகையில்  மாவட்டத்தில் விற்பனைக்கு உள்ள அனைத்து உப்பு வகையான அனைத்து நிறுவனங்களின் உப்பு பாக்கெட்டுகளையும் மாதிரி எடுத்து ஆய்வு செய்து ஆய்வு முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

    ஏற்கனவே 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மாவட்டத்தில் உதகை கூடலூர் பந்தலூர் குன்னூர்  உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கடைகளில் 126 மாதிரிகள் எடுக்கப்பட்டது,  அதில்  55 மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவான 15 பிபிம் அளவிற்கு குறைவாக உள்ளது. 38  மாதிரிகளில் அயோடின் துளி கூட இல்லை என்பதும் குறிப்பிடதக்கது. அயோடின் குறைவாக உள்ள உப்புகள் உணவுக்காக பயன்படுத்த தகுதியற்றது.

    இதுகுறித்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.  அவர்கள் பெரும்பாலும் தவறு அவர்களுடையது இல்லை என்றும் கடைகளில் உப்பினை வெயில் மழை படும்படும் வைத்திருப்பதாகவும்,  அதனால் உப்பில் சேர்க்கப்பட்டுள்ள அயோடின் ஆவியாகி கரைந்து இருக்கும் என்கின்றனர்.

    விற்பனை செய்பவர்களும் உப்பினை உரிய பாதுகாப்பான முறையில் வெயில் மழை படாமல் வைக்க வேண்டியது அவசியம்.  தரகுறைவான உப்பினை விற்பனை செய்தால் விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

    அயோடின் மனித வாழ்வுக்கு இன்றியமையாது தேவைப்படும் நுண்ணூட்டச்சத்து ஆகும்.  அயோடின் சத்து பற்றாக்குறையால் கரு கலைதல், மூளை வளர்ச்சி இல்லாமை, ஊனமுற்ற குழந்தை பிறத்தல், மன நலம் பாதிப்பு மற்றும் முன் கழுத்து கழலை போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றது.  அயோடின் சத்து பற்றாக்குறை குறைபாடுகளை தடுத்திட மத்திய மற்றும் மாநில அரசு உப்பின் வாயிலாக அயோடின் சத்தை அளித்திட முடிவு செய்து உணவிற்காக விற்பனை செய்யப்படும் உப்பில் கட்டாயம் அயோடின் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    உணவிற்காக தயாhpக்கப்படும் உப்பில் 30 பி.பி.எம். அளவு தயாரிப்பு நிலையில் அயோடின் இருக்க வேண்டும் என்றும், நுகர்வோருக்கு விற்பனைக்கு வரும் நிலையில் அயோடின் அளவு  15 பி.பி.எம். அளவிற்கு குறையக் கூடாது என்றும் உணவுப் பாதுகாப்பு தரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தரமான அயோடின் உப்பு நுகர்வோருக்கு கிடைக்கின்றா என அறிய கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் ஆகியன சார்பில் கடைகளில் விற்பனைக்கு உள்ள உப்பு மாதிரிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலான உப்பு பாக்கெட்டுகளில் போதுமான அளவு அயோடின் இல்லாத நிலையே காணப்படுகின்றது.  மேலும் போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட்டுகளிலும், பதப்படுத்தும் உப்பு எனக் குறிப்பிட்டு உணவிற்காக விற்பனை செய்வதையும் காண முடிகின்றது

    மக்களுக்கு தரமான அயோடின் உப்பு கிடைப்பதை உறுதிப்படுத்திடவும் அக்டோபா; 21 உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்வாக நீலகிரி மாவட்டத்தில் விற்பனைக்கு உள்ள அனைத்து விதமான உப்பு கம்பேனிகளின் உப்பு பாக்கெட்டுகளையும் நுகர்வோர் ஆர்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ நுகர்வோர் மன்ற மாணவர்களைக் கொண்டு அடையாளம் கண்டு அந்த உப்பு மாதிரிகளை வாங்கி எமது திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் ஆராய்ச்சி மையத்தின்  ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்க உள்ளோம் 

    ஆய்வு முடிவின் அடிப்படையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டங்களின் வாயிலாகவும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்

    நன்றி                                                                          இப்படிக்கு

    சு. சிவசுப்பிரமணியம்    பொதுச்செயலாளர்                                            சி. காளிமுத்து     தலைவர்.

    ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,192 டன் ஜவ்வரிசி பறிமுதல்

    ராசிபுரம், சுற்றுவட்டார பகுதியில், உணவு பாதுகாப்பு துறையினர் செய்த அதிரடி சோதனையில், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,192 டன் ஜவ்வரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதியான, அத்தனூர், மசக்காளிப்பட்டி, ஆண்டகளூகேட், அப்புநாயக்கன்பட்டி, மெட்டாலா, அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதி குடோன்களில், 
    மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கவிக்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள், நான்கு குழுக்களாக பிரிந்து சோதனையிட்டனர். 

    இதில், ஐந்து குடோன்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள், மூன்று மில்களில் இருப்பு வைத்திருந்த, 1,192 டன் ஜவ்வரிசியை பறிமுதல் செய்து, அவற்றின் மாதிரியை சோதனைக்கு அனுப்பினர். 

    இவற்றின் மொத்த மதிப்பு, ஆறு கோடி ரூபாய். உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள, 22 குடோன்களில், இதுவரை, 14 குடோன்களில் சோதனையிட்டுள்ளனர். 

    மீதியுள்ள, எட்டு குடோன்களில், தொடர்ந்து சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

    இதுகுறித்து, கவிக்குமார் கூறியதாவது: புகாரின் பேரில், தொடர் சோதனையை நடத்தி வருகிறோம். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், உற்பத்தி தேதி குறிப்பிடாமல் இருந்தாலும் அல்லது குறிப்பிட்ட தேதிக்கு பிறகு குடோனில் இருப்பு வைத்திருந்தாலும், அது காலாவதியானதாக கருதப்படும். அதன்படி, 1,192 டன் ஜவ்வரிசியை பறிமுதல் செய்துள்ளோம். 

    இவ்வாறு, அவர் கூறினார்.

    உணவு வணிகம் புரிபவர்கள் அனைவரும் பதிவு மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

    சேலம் மாவட்டத்தில் உணவு வணிகம் புரிபவர்கள் அனைவரும் பதிவு மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார். 

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் உணவு வணிகம் புரிபவர்களுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாமை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

    பின்னர் அவர் வணிகர்களுக்கு பதிவு மற்றும் உரிமம் சான்றிதழ்களை வழங்கி பேசியது: 
    உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன்படி உணவு வணிகம் புரிபவர்களுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் 2016, ஆகஸ்ட் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. 

    மேலும் கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இச்சட்டத்தின்படி உணவு வணிகம் புரிபவர்கள் பதிவு மற்றும் உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்பதற்காக உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
    சேலம் மாவட்டத்திலுள்ள 20,353 தனியார் உணவு வணிகர்களில் 30 சதவீதம் அதாவது 6,189 உணவு வணிகர்கள் மட்டுமே உணவு பாதுகாப்புத் துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளனர். 

    உணவு பாதுகாப்புத் துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறாமல் தொடர்ந்து உணவு வணிகம் புரிவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
    சேலம் மாவட்டத்தில் 2017, செப்டம்பர் முடிய 859 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு 334 உணவு மாதிரிகள் தரமற்றவையாகக் கண்டறியப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 106 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.49,36,500 அபராதமாக விதிக்கப்பட்டது. 

    எனவே, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ல் உள்ள நெறிமுறைகளின்படி உணவு வணிகம் புரிய வேண்டும். 

    மேலும், டெங்கு காய்ச்சல் பரவி வரும் இக்காலகட்டத்தில் தங்களது உணவு வணிக வளாகத்தில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்களின் புழுக்களோ அல்லது கொசுப்புழு உருவாக ஏதுவாக ஏதேனும் கொள்கலன் இருந்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கப்படும். 

    தேவைப்படுமாயின் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தை ரத்து செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார். 

    நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன், உணவு வணிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு

    உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  சகோதரி புஷ்பா  தலைமை தாங்கினார்
    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து,  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மரியமதலேன், பிரிசில்லா, உததகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பின் இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது
    நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு பள்ளிகளில் அதிகரித்து வருவது பாராட்டுதலுக்குரியது.  இன்னும் பல இடங்களில் பில் தரும் வழக்கம் இல்லை.  பில் தரும் இடங்களில் பொருட்களை வாங்க நுகர்வோர்கள் முன்வர வேண்டும்.  பில்லுடன் பொருட்கள் வாங்கினால்தான் நுகர்வோர் குறை தீர் மன்றங்களில் வழக்கு பதிவு செய்ய முடியும்.  விளம்பரங்களால் ஆட்பட்டிருக்கும் நாம் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் தவறான விளம்பரங்களை புரிந்து அவற்றை தவிர்க்க வேண்டும் என்றார்.

    உதகை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் பேசும்போது
    உணவுப்பொருட்களில் எளிதில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் தரமற்ற பொருட்களை கலக்கின்றனர். உணவுப்பொருட்களில் நமக்கு தேவையான சத்துக்களான மினரல்கள், விட்டமீன்கள், தாது சத்துகள் ஆகியன மட்டுமே நமக்கு தேவைப்படுகின்றது.  ஆனால் உணவுப்பண்டங்கள் அழகாக காட்சி அளிக்கவும், சுவைக்காகவும் பல்வேறு நிறங்கள், சுவையூட்டிகள் கலக்கின்றனர்.  எண்னை போன்றவற்றில் தரமற்ற கழிவு எண்ணைகளை கலக்கின்றனர்.  உணவு பண்டங்கள் வாங்கும்போது  பொட்டலங்களில் மேல் உள்ள தகவல்களை பார்த்து வாங்க வேண்டும் என்றார்.

    கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் பற்றாக்குறையினால் மாணவர்களிடையே நினைவாற்றல் குறைவதோடு,  படிப்பிலும் மந்த தன்மை ஏற்படுகின்றது. அயோடின் பற்றாக்குறையால் பெண்களுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படுகின்றது.  ஊனதன்மையுடன் உரிய வளர்ச்சியின்றி குழந்தைகள் பிறப்பது போன்ற பாதிப்புகள் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படுகின்றது.  எனவே எப்போது உப்பு வாங்கும்போது 30 பிபிஎம் அளவு அயோடின் அளவு சேரக்கப்பட்ட உப்பினை வாங்க வேண்டும்.  கடைகளில் முறையான பராமரிப்பு இல்லாத உப்புகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    நிகழ்சசியில் கலப்பட உணவால் ஏற்படும் பாதிப்பு, காலாவதி மருந்துகளால் ஏற்படும் விளைவுகள், தரமற்ற உணவுகள் மற்றும் பொருட்காளல் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகள் சார்பில் குறுநாடகம் கவிதை பாட்டு பேன்ற கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சியில்  கோவை நுகர்வோர் அமைப்பு நிர்வாகி கண்ணன், உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க நிர்வாகி நாகராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    உதகை சிஎம்எம் மேல்நிலைப்பள்ளியில்

    உதகை சிஎம்எம் மேல்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு கருத்தரங்கு நடைப்பெற்றது.

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், உணவு பாதுகாப்பு துறை, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்
    ஆகியன இணைந்து நடத்திய உணவுப்பாதுகாப்பு கருத்தரங்கிற்கு  பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் தலைமை தாங்கினார்.

     கூடலூர் நுகர்வோர் மளிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர் மரு. கருணாநிதி பேசும்போது

    உணவு பாதுகாப்பில் நுகர்வோர்கள் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்,

    அரசு துறைகள், நுகர்வோர் அமைப்புகள் , மாணவர்கள், மக்கள்  என அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படுவதால் மட்டுமே உணவு கலப்படம் மற்றும் தரமான உணவுகளை அறிந்துகொள்ள முடியும்.

    உணவு கலப்படம் மற்றும் உணவு சார்ந்த புகார்களை வாட்சப் எண்  94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

    உணவுப்பொருட்களில்  அளவிற்கு அதிகமான நிறங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    உதகை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் பேசும்போது

    உணவுப்பொருள்கள் வாங்கும்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், மற்றும் தகவல்கள் பார்த்து வாங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கலப்பட பால் மிகவும் குறைவாகவே உள்ளது.  பாலில் தண்ணீர் தான் அதிகஅளவில் கலப்படம் செய்யப்படுகின்றது.

    இரசாயன பால் விற்பனை செய்யப்படின் புகார் தெரிவிக்கலாம்.  அதுபோல் பிளாஸ்டிக் அரிசி விற்பனையும் தமிழகத்தில் இல்லை.

    நூடுல்ஸ் மைதா மற்றும் இதர ரெடிமேட் உணவுகள் கெட்டுபோகாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் மற்றும் சுவையூட்டிகள் மெல்ல கொல்லும் விசமாக மாறி புற்றுநோய் போன்ற கொடிய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    அதுபோல தரமற்ற உணவுகளை தவிர்த்து தரமான உணவுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார்.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசும்போது
    இயற்கை உணவுகளை பாரம்பரிய உணவுகளை பயன்படுத்துவது உடலுக்கும் கொடுக்கும் பணத்திற்கும் நலன் பயக்ககூடியது என்றார்.

    தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களில் ஒருங்கிணைப்பின் இணைச்செயலாளர் கோவை தமிழ்ச்செல்வன் பேசும்போது

    பணம் கொடுத்து பொருள் வாங்கும்போது சட்டப்படி நுகர்வோர் ஆகின்றோம்,  தரமற்ற பொருட்கள் வாங்கினாலோ இதர நுகர்வோர் குறைகள் இருப்பின் நுகர்வோர்  குறைதீர்மன்றங்களில் வழக்கு பதிவு செய்து நிவாரணம் பெறலாம்,  விழிப்போடு இருப்பது நுகர்வோர் களுக்கு  கட்டாயம் என்றார்.

    நிகழ்ச்சியில் கோவை நுகர்வோர் அமைப்பு நிர்வாக கண்ணன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுவீட்டி, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    S. Sivasubramaniam
    General Secretary
    CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
    ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)

    Web:
    www.cchepnlg.blogspot.in
    www.cchepeye.blogspot.in
    http://facebook.com/cchepnilgiris

    quality of milk and focus on hotspots


    To assess the quality of milk and focus on hotspots where adulteration is most deep-rooted, the Government is all set to launch one of the most extensive surveys with the sample size of about 8,000 from across 36 States/UTs covering 717 districts.
    At least 13 common adulterants will be tested by the Food Safety and Standard Authority of India (FSSAI). These are adulterants like vegetable oil/fat, detergents/caustic soda, hydrogen peroxide, sugar, glucose, urea, starch, maltodextrin, boric acid, ammonium sulphate, nitrates, cellulose along with pesticides and antibiotic residues covering each and every district of the country.
    A senior official from the Authority said that however, sampling would be based on the result of the previous survey, the finding of which would be shared with the successful bidders.
    In case the results of analysis of milk samples come out to be non standard but unsafe in a particular area in the previous as well as proposed survey, then more extensive analysis would be carried out in that particular areas to find out root cause of unsafe milk.
    “Thus, the proposed milk survey is an extension of the previous milk survey in terms of number of samples, types of tests to be conducted and geographical area to be covered. The proposed survey also includes designing and operation of a framework for continuous monitoring of milk quality in the hotspot areas. This would lead to extensive and intensive analysis of milk,” said the official.
    Maximum samples will be picked from Uttar Pradesh( 750), Madhya Pradesh (600), Bihar (450) while 350 each samples from Tamil Nadu, Assam, Telangana, Rajasthan and Karnataka.
    In fact, a few months back, the FSSAI had conducted a survey in which it was found that in general milk adulteration was low in southern India, more in north India. A survey with a sample size of about 2,500 was conducted in which some states had reported no adulteration at all.
    On June 5, the Madras High Court had observed that adulteration in milk was a serious matter and directed the government to file a status report on the action taken on such complaints.
    The direction was given by Chief Justice Indira Banerjee and Justice M Sundar while hearing a PIL seeking a CBI probe into the reports of adulteration in milk by various private producers.

    யார் யார் இரத்த தானம் செய்யலாம்

    யார் யார் இரத்த தானம் செய்யலாம்?

    🌺நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

    🌷18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

    🌷குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

    👍👍இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
    எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?💥

    ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்,
    பெண்கள்
    நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.🌷🌷

    இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

    10 நிமிடம்.👍

    இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?🌺🌺

    20 நிமிடம்.👍👍

    இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?🌸🌸

    350 மில்லி.👍👍

    (நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது)
    எடுக்கப்படுகிற
    இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.🌺

    இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?🔥🔥

    10 லிருந்து 21 நாட்களில்.🌷

    இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?🍁🍁

    நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.

    பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.
    ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து
    உயிர் காப்பது
    நல்லதுதானே?🌺🌺

    இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?🔥

    நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.
    தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
    சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?🌷

    உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்டை பயன்படுத்துங்கள்.

    💢சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

    💢 ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

    💢ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

    💢குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

    💢 அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

    🌹குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

    🌹பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

    🌹 சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

    🌹பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்

    🌷 பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

    🌷 இதய நோய்கள் _ வேண்டாம்.

    🌷 இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

    🌺வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம்.
    மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

    🌺தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

    🌺 நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

    🍁மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

    🍁மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.

    🍁 காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.
    மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

    🔥 சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

    🔥 ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

    🔥 நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.

    💦இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

    💦ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

    💦இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள்,

    இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

    இரத்ததானம்👍👍👍 கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

    💥 நல்ல திரவ உணவை அருந்துங்கள்.
    ஹெவி உணவு வேண்டாம்.

    💥 ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.
    3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

    💥 இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.

    உதிரம் கொடுப்போம் 💐
    உயிரை காப்போம் 💐

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

    பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்

    கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
    மகாத்மா காந்தி பொது சேவை மையம்
    பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் 108 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி தலைமை தாங்கினார்.

    கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத்,  காந்தி பெண்கள் பொது சேவை மைய செயலாளர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது

    டெங்கு காய்ச்சல் ஏடீஸ் கொசு டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவரை கடித்த பின் மற்றவர்களை கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் வரும்.  டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. 

    சுத்தமான தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டையில் இருந்து லார்வா பூச்சிகளாக வெளிவந்து ஏடீஸ் கொசுவாக உருவாகின்றது.  முக்கியமாக பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.

    மூன்று வாரங்கள் மட்டுமே வாழும் இந்த கொசு 2,3 முறை முட்டையிடும்.  200 முட்டைகள் வரை ஒரு நேரத்தில் புழுக்களாக உருவாகி பரவுகின்றது.

    கொசுக்கள் குறைந்தபட்சம் 500 மீட்டர் தூரம் வரையே பறந்து செல்லும்.

    இந்த கொசுக்கள் பகல் நேரங்களிலே கடிக்கும்.  முழு கை சட்டை மற்றும் கால்களை மறைக்கும் வகையில் துணிகள் அனிந்து கொள்ளலாம்.  கைகளில் கொசு கடிக்காமல் இருக்க எண்னை மற்றும் திரவங்களை தடவி கொள்ளலாம்.

    கொசுக்களை உருவாகாமல் தடுப்பதே டெங்கு நோய் தாக்காமல் இருக்க முக்கிய வழியாகும்.
    சுத்தமான தண்ணீர் தேங்காமல் வீட்டை சுற்றி பராமரிக்க வேண்டும். 

    டெங்கு காய்ச்சல் குறித்து பயப்பட தேவையில்லை.  தொடர் காய்ச்சல் இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தேவையற்ற மருந்துகள் ஊசிகள் போடுவதால் நோயின் தாக்கம் அதிகமாகும்.
    என்றார்.

    தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் அதில் உள்ள வசதிகள், அளிக்கப்படும் முதலுதவிகள், பயன்படுத்திக்கொள்ளும் முறைகள் குறித்து 108 சேவை திட்ட ஒருங்கினைப்பாளர் கற்பகவினாயகம் குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.

    தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், பள்ளி ஆசிரியர் தண்டபாணி, கொளப்பள்ளி சுகாதார ஆய்வாளர் சேகர்  ஆகியோர் பேசினார்கள்.
    மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

    FIR போடுவது யார்

    யார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியும்?

    குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 154(1) இன் படி, ஒரு நிலைய பொறுப்பில் இருக்கும் constable ரேங்க்ஐ விட கூட உள்ள ஒருவர் ஒரு வழக்கினை பதிய முடியும்.

    ஒரு grade 2 constable ஒரு குற்ற வழக்கை (cognizable offence) பதிய முடியாது. .

    ஒரு அவுட் போஸ்ட் காவல் நிலையத்தில் உள்ள தலைமை constable குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174 இன் படி, ஒரு குற்ற வழக்கை பதிந்து,
    அதை விசாரிக்க TN PSO 585 படியும், பிரிவு  21(40) படி உள்ள சென்னை கிரிமினல் ரூல்ஸ் of Practice படியும், அதிகாரம் பெற்றவராவார்.

    குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 36 இன் படி, எந்த ஒரு உயர் அதிகாரியும் வழக்கு பதிந்து, அதை விசாரிக்க முடியும்.

    உத்தேசமான தமிழ்நாடு காவலர் சட்டம் பிரிவு 35 படி, ஒரு சீனியர் காவல் அதிகாரி, தனது உதவி அதிகாரியின் கடமைகளையும் செய்ய முடியும் என்று தெரிவிக்கிறது.

    ஒரு காவல் நிலையத்தில் வழக்கை பதிவு செய்ய, அந்த காவல் நிலையத்தில் பணியாற்ற வேண்டும். வேறு காவல் நிலையங்களில் பணி புரியும் காவல் அதிகாரிகள்,
    தங்கள் காவல் நிலையம் தவிர, வேறு எங்கும் வழக்கு பதிய அதிகாரம் பெற்றவர்கள் அல்லர்.

    உதாரணமாக, சிறப்பு பிரிவு  CID, intelligence துறை, தமிழக மின்சார துறையில் உள்ள Vigilance துறை,  ஆவின், முனிசிபல் corporation, போக்குவரத்து corporation, காவலர் பயிற்சி கல்லூரி, Armed Reserve Wings, கம்ப்யூட்டர் Wing, கிரைம் ரெகார்டு பீரோ ஆகியவற்றில் பணி புரியும் காவலர்,
    வழக்கு ஏதும் தாக்கல் செய்ய முடியாது. ஏனென்றால், அவர்கள் துறை, காவல் நிலையங்கள் என்று வரையறுக்கப்படவில்லை.

    கிரைம் பிரான்ச் CID, கமர்ஷியல் கிரைம்ஸ் விசாரணை பிரிவு, பொருளாதார குற்றங்கள் பிரிவு மற்றும் விஜிலன்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு ஆகியவை காவல் நிலையம் என்று வரையருக்கபட்டுள்ளதால்,

    அங்கு பணி புரியும் காவல் அதிகாரிகள், வழக்கு பதிவு செய்யவும், புலன் விசாரணை நடத்தவும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.

    மேலே சொன்ன செய்திகள் “Police Investigation – Powers, Tactics and Techniques” என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்களின் தமிழ் வடிவம்.

    இதன் ஆசிரியர்

    திரு. V. சித்தண்ணன்,
    Deputy Commissioner of Police and Superintendent of Police & Principal Retd, Tamil Nadu Police Academy.

    நேர்மைக்கான குடிமக்களின் உறுதிமொழி

    நேர்மைக்கான குடிமக்களின் உறுதிமொழி

    நம் நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடைகளில் ஒன்றாக ஊழல் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். 

    அரசு, குடிமக்கள், தனியார் துறை போன்ற இதில் தொடர்புடைய அனைவருமே ஊழலை முற்றிலுமாக அகற்றுவதற்கு ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என நான் நம்புகிறேன்.
    நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எல்லா நேரங்களிலும் நாணயம், நேர்மை ஆகியவற்றின் உயர்ந்த தரத்தைக் கடைப்பிடிப்பது என உறுதியேற்பதுடன், அது குறித்த விழிப்புணர்வுடனும் இருப்பதோடு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கவும் வேண்டும் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

    எனவே, கீழ்கண்ட விஷயங்கள் குறித்து நான் உறுதி ஏற்கிறேன்:

    • வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் நேர்மையையும், சட்டத்தின் ஆட்சியையும் பின்பற்றுவேன்;

    • எந்தச் சூழ்நிலையிலும் எவருக்கும் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன்;

    • எனது கடமைகள் அனைத்தையும் நேர்மையாகவும், வெளிப்படையான வகையிலும் நிறைவேற்றுவேன்;

    • பொது நலனுக்கு உகந்த வகையில் செயல்படுவேன்;

    • தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணமாக விளங்குவேன்;

    • எந்தவொரு ஊழல் நிகழ்வையும் அது தொடர்பான தகுந்த அமைப்பிற்குத் தெரிவிப்பேன்

    WILDFLOWERS

       
    Vasanthan Panchavarnam
    16 அக்டோபர், 12:25 AM
     
    WILDFLOWERS 

    The beauty of flowers has always captivated the imagination of man over the centuries, for they toil not and neither do they spin, and yet even Solomon in all his glory was not arrayed like one of these. Flowers are the sweetest things that God ever made, only he forgot to put a soul into them. 

    The Maker himself appears to have been no mean gardener, for after creating man in his own image, he didn’t immediately go about creating Eve, but rather preferred to first lay out a garden which he charged man with attending to. 

    Neither are gardens peculiar to Eden alone, Greek myth speaks about three nymphs who tended to a blissful garden in a far western corner of the world, the ‘Garden of Hesperides.’ Indra Loka of the Hindu faith is famed for its celestial gardens planted with sacred trees and sweet-scented flowers. 

    Flowers, chiefly those growing wild, figure largely in English poetry. Blake sees ‘heaven in a wild one’ ; Milton speaks about ‘meadows trim with daisies pied’ ; and Wordsworth’s pleasantly recalls his ‘daffodils.’ There are as well Shelly’s ‘rain-awaken’d flowers, and the odorous champak,’ ; also Keats’s ‘hawthorn, eglantine, and musk-rose,’ and it would be a grave injustice not to mention the one of dear old Bill, ‘which called by whatever name, would still smell just as sweet.’ These are just a representative few, for the list is endless. 

    Flowers and the Nilgiris are synonymous, for isn’t the gregarious flowering of the Neel Kurunji hazarded as one of the reasons behind its name? 

    There is little space for doubt that the wild flowers of the meadowy mounds and wooded glens of these hills, charmed the Englishmen who made them their summer retreat, for many are the accounts about the captivating beauty of the flora, by both resident and pilgrim alike. Such was the interest evoked in wild flowers, that scientist and layperson alike, tried to coin English equivalents for the local names for them. 

    Those talented with the brush, the ladies in particular, went about making watercolours and sketches, and one such collection titled ‘Ootacamund Flowers,’ a compilation of more than 200 species of plants made by around 30 amateur artists, is known to have been compiled by one Mrs E. T. Browne in the 1900s, who was no mean artist herself, but this valuable collection, the only one of its kind, is now irretrievably lost. 

    It was this passion for flowers that prompted Lt. Colonel R. H. Beddome, Conservator of Forests for the Madras Presidency, to include two sections, captioned as ‘Beautiful plants of the Hills,’ and ‘List of flowering plants’ ;

     in his chapter titled ‘Flora’ ; which he had contributed for publication in the District Manual of 1880 compiled and edited by H. B. Grigg. 

    It was again this passion that urged the colonisers to set about the first public parks, recreation grounds, and ornamental gardens, filled with every kind of exotic flower and tree.

    A few of these have now become ‘garden escapes,’ and can be seen growing wild by road margins, unattended fields, pasture lands, and etc. Most are harmless and add beauty to the existing colour scheme. 

    But, a few have become a nuisance, and threaten to take over entire ecosystems, the pestilential lantana in the lower reaches and mid altitudes, and the gorse and scotch broom in the uplands.

    The floral pulchritude is as well threatened by global warming which is now raising its ugly head, and which may make the hills witness a floral shift in a few decades to come, unless humanity at large, decides to finally mend its ways. 

    Common names in trailing order 

    1. Strobilanthes luridus (Mal. Mutta-kanni kurunji)
    2. Checkered Vanda
    3. Small Flowered Vanda
    4. Hound’s Tongue
    5. Spreading Flowered Habenaria
    6. Dwarf Morning Glory
    7. Christmas Tree Orchid or Wood Orchid
    8. Tiger Lily aka Glory Lily aka Flame Lily
    9. Bastard Mango or Hill Mango
    10. Impatiens denisonni
    11. Mussenda or Dhobi Tree
    12. Nilgiri Cluster Rose
    13. Indian Flame Tree (Mal. Palash Pushpam)
    14. Rose Myrtle (Tamil. Thovutupalam)
    15. Nilgiri Balsam or Leschenault’s Balsam
    16. Violet Skullcap
    17. Star Violet
    18.Rhododendron (Badaga. Bilimaram)
    19. Neel Kurunji
    20. Twin Spur Orchid
    21. Nilgiri Lily
    22. Asian Mazus
    23.Sonerilla

    தீபாவளி லேகியம்

    எல்லோரும் தீபாவளிப் பலகாரம் செய்துட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

    அதோடு சேர்த்து  தீபாவளி லேகியத்தையும் செய்து சாப்பிடுங்க‌.

    நெய்யில் சுட்ட‌ இனிப்பு, காரம் மற்றும் அசைவம் இப்படி வகை வகையா சாப்பிட்டு நம்ம‌ வயிறு கொஞ்சம் அப்சட் ஆகி இருக்கும்.

    இந்த‌ லேகியத்தை சாப்பிட்டீங்கன்னா பலகாரம் எல்லாம் நல்லா சீரணமாகி வயிறு நம்மை வாழ்த்தும்.

    ஓமம் சேர்த்து செய்வதால் வாய்வு கோளாறு வராமல் காக்கும்.

    வயிற்றின் மந்த‌ நிலையைப் போக்கும்.

    தீபாவளி லேகியம்

    தேவையான‌ பொருட்கள்

    சுக்கு = 25 கிராம்
    ஓமம் = 50 கிராம்
    கண்டந்திப்பிலி = 3 ஸ்பூன்
    அரிசித்திப்பிலி = 3 ஸ்பூன்
    சித்தரத்தை = 1 குச்சி
    இள‌சான‌ இஞ்சி = 1 துண்டு
    மிளகு = அரை ஸ்பூன்
    மல்லி = 1 ஸ்பூன்
    சீரகம் = அரை ஸ்பூன்

    இஞ்சியைத் துருவி வெயிலில் உலர்த்தவும்.

    அனைத்துப் பொருட்களையும் உலர்த்தி லேசாக‌ வறுத்து மிக்சியில் நன்கு பொடியாக்கவும்.

    பொடி அரை ட‌ம்ளர் வரும். இதோடு வெல்லம் முக்கால் டம்ளர் சேர்க்கவும்.

    நெய் = 3 கரண்டி
    தேன் = 2 கரண்டி
    நல்லெண்ணெய் = 1 கரண்டி

    எல்லாவற்றையும் கலந்து அடுப்பிலிட்டு ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

    கலவை அல்வா பக்குவம் வந்ததும் இறக்கவும். அதிக‌ நேரம் அடுப்பில் இருந்தால் கலவை இறுகி விடும்.

    அப்புறம் கல்லு போல‌ கடிக்க‌ கடினமா ஆயிடும். பக்குவமா சட்டியில் ஒட்டாமல் வந்ததும் எடுங்க‌.

    இதை காலை வேளை ஒரு கோலி அளவு எடுத்து உருட்டி அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம்.

    தீபாவளி சமயம் மட்டுமல்லாமல் வாரந்தோறும் அதாவது ஞாயிறு தோறும் உங்க‌ வீட்டு வாண்டுகளுக்கு ஒரு உருண்டை கொடுத்து வந்தால் உணவு நல்லா சீரணமாகி வயிறு சும்மா கலகலன்னு இருக்கும்.

    வயிற்றுக் கோளாறு எதுவும் வராது.

    சுவையாக‌ இருப்பதால் அப்படியே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள். சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க‌ மாட்டாங்க‌.

    எப்பவும் இந்த‌ லேகியம் நம்ம‌ வீட்டில் இருக்க‌ வேண்டிய‌ ஒன்று. கெட்டுப் போகாமல் ரொம்ப‌ நாள் வரும்.

    சில‌ பொருட்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.

    ஓமம், சுக்கு ரெண்டும் ரொம்ப‌ முக்கியம். செய்து பாருங்க‌ தோழிகளே.

    பதிவுப் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே இனிப்புப் பொருட்களை வாங்க வேண்டும்


    பதிவுப் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே இனிப்புப் பொருட்களை வாங்க வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை அறிவுரை.

    by SENTHIL
    விருதுநகர்
    விழாக் காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவுப் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார். 
    விருதுநகர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தற்போது விழாக்காலம் தொடங்கியுள்ளது. விழாக் காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருள்களை மக்கள் விரும்பி வாங்குவர்.
    தீபாவளிக்கு இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
    இனிப்பு மற்றும் பேக்கரி தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும். கலப்பட பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு, விவரச் சீட்டு வைத்து அதில் தயாரிப்பாளரின் முழுமுகவரி, உணவுப் பொருளின் பெயர்,  தயாரிக்கப்பட்ட, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
    மேலும், உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
    மக்களும் விழாக் காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவுப் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும்.
    இது தொடர்பாக புகார்கள் இருந்தால் விருதுநகர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலரிடமோ அல்லது மாநில உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கோ புகார் தெரிவிக்கலாம்” என்று அதில் குறிப்பிட்ட்டு இருந்தார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

    கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் கூடலூர் காவல்துறை,
    கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மையம், தொழிற் பயிற்சி மையம் ஆகியன
    இணைந்து 
    சாலை  பாதுகாப்பு மற்றும் நீலதிமிங்கலம் விளையாட்டு
    குறித்து விழிப்புணர்வு முகாம்  நடத்தப்பட்டது.

    பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் வரவேற்றார்.

    முகாமிற்கு தலைமை தாங்கிய கூடலூர் காவல்துறை ஆய்வாளர் சக்திவேல்
    பேசும்போது 

    காவல்துறை மக்களிடம் நண்பர்களாக பழகுகின்றோம்.  தவறு
    செய்பவர்களை தண்டிப்பது  காவல்துறை  நோக்கமல்ல. 

    ஆனால் தவறு செய்பவர்களை
    திருத்த வேண்டியது அவசியம்.   இரண்டு மூன்று முறை எச்சரித்து விடுவோம்.
    அதற்கு பின் உரிய தண்டனை வழங்க  சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.  சட்டம்


    நம்மை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டுள்ளது.  சாலைவிதிகளை அறிந்து
    செயல்படுவது அவசியம். 

    கூடலூர்  பகுதியில் இருவர் புளுவேல் எனப்படும்
    நீலதிமிங்கலம் விளையாட்டில்  ஈடுபட்டவர்களை மீட்டுள்ளோம்.  இதற்கு
    அடிமையாகி இருப்பவர்கள் அனுகினால் அவரகளை  மீட்டு பாதுகாப்பு
    நடவடிக்கைகள் மேற்க்கெள்ளப்படும்.  

    மாணவர்களுக்கு காவல்துறை  பணிகள்
    குறித்து நேரடி செயல்விளக்கம் தரவும் பணிகள் குறித்து நேரடி விளக்கம்
    அளிக்க  தயாராக உள்ளோம் என்றார்.

    போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் சத்தியன் பேசும்போது 

    சாலைவிதிகளை
    மீறும் பழக்கம் இளம்பருவத்தினரிடையே அதிகரித்து வருகின்றது.  அதுபோல இளம்
    பருவத்தினரிடம் விபத்துக்களும்  அதிகரித்து பாதிப்புகளும்
    அதிகரித்துள்ளது. 

    லைசென்ஸ் இல்லாமல்  வாகனங்களை இயக்குவது தவறு.  18
    வயதிற்க்கு உட்பட்டவர்கள் வாகணங்களை இயக்குவதை  தவிர்க்கவேண்டும்.
    காவல்துறை முயற்சியின் மூலம் சிலருக்கு லைசென்ஸ் பெற்று
    கொடுக்கப்பட்டுள்ளது.  

    லைசென்ஸ் தேவைப்படும் மாணவர்கள் காவல்துறையினர்
    மூலம் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

    கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலளர் சிவசுப்பிரமணியம்,


    ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சத்தியநேசன், சாலை விதிகள் குறித்து விளக்கம்
    அளித்தனர்.

    காவல்துறை உதவி ஆய்வாளர்கள்  சிவராஜ், பிரகாஷ், காவல் துறை காவலர்கள்
    ஹிகாபுதின்,  பயிற்சி மைய ஆசிரியர்கள் மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர்
    கலந்து கொண்டனர்.

    முடிவில் பயிற்சி மைய ஆசிரியர் மாதையன் நன்றி கூறினார்.

    --
    *S. Sivasubramaniam*  General Secretary 
    CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
    ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)
    THE NILGIRIS  643 233.*

    உயில் நடைமுறைகள்

     *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...